கோமாளி இயக்குனருக்கு தங்க செயின் பரிசு... கே.எஸ்.ரவிக்குமார் பாராட்டு
சென்னை: கோமாளி படம் வெற்றிப்படமாக அமைந்ததை பாராட்டி இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு கே.எஸ். ரவிக்குமார் தங்க செயின் பரிசளித்து பாராட்டினார்
சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த படம்தான் கோமாளி. இந்த படத்தை அறிமுக இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்து இருந்தார். ஜெயம் ரவி , காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது .

இந்த படத்தில் இயக்குனர் கேஎஸ்.ரவிக்குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். தற்போது கே.எஸ்.ரவிக்குமார் கோமாளி பட இயக்குனரை பாராட்டும் விதமாக பிரதீப் ரங்கநாதனுக்கு தங்க செயினை பரிசளித்து உள்ளார். இந்த தகவலை பிரதீப் ரங்கநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நான் பல முறை கே.எஸ். ரவிக்குமாரின் படையப்பா படம் பார்க்கும் போது கூட இந்த கனவை நான் கண்டதே இல்லை. கே.எஸ்.ரவிக்குமார் தற்போது எனக்கு தங்க செயினை பரிசளித்து இருக்கிறார் என்று தனது மகிழ்ச்சியை பதிவு செய்து இருக்கிறார்.
2019ன் முக்கிய வெற்றி படங்களில் கோமாளி மிக முக்கியமான படம் ஆகும். பல திரையரங்குகள் மற்றும் விமர்சகர்கள் 2019ன் வெற்றி பெற்ற மற்றும் லாபம் அடைந்த படங்களை கூறுகையில் கோமாளி படத்தை பெரிய வெற்றி படங்களின் வரிசையில் குறிப்பிட்டு கூறினார்கள். அந்த அளவுக்கு நல்ல வெற்றியை கோமாளி படம் பதிவு செய்து இருந்தது .
கே.எஸ்.ரவிக்குமார் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் . அவர் பிரதீப்பை அழைத்து தங்க செயின் பரிசளித்தது ஒரு முக்கிய நிகழ்வு தான். மென்மேலும் அவர் நல்ல படங்களை இயக்க வேண்டும் என்று ஊக்கமளிக்கவே இயக்குனர் ரவிக்குமார் இதனை செய்து இருப்பார் என்று கருதப்படுகிறது.
கே.எஸ்.ரவிக்குமார் தற்போது படங்களை இயக்குவதை குறைத்து விட்டார். அவர் கடைசி இரு படங்களையும் பாலாகிருஷ்ணாவை வைத்தே இயக்கி இருந்தார். தமிழில் பல முக்கிய படங்களை இயக்கிய இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், பழையபடி நல்ல படங்களை இயக்க வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பம்.


Click it and Unblock the Notifications











