இது வேற லெவல் வாத்தி கம்மிங்.. ரிங்கை வைத்து இன்னாம்மா வித்தைக் காட்டுறாரு இந்த கோமாளி ஹீரோயின்!

சென்னை: தளபதி விஜய்யின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, அஸ்வின் குமார், ட்ரெட் மில்லில் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி அசத்தினார்.

Recommended Video

Actor Sathish Tribute to Thalapathy Vijay | அப்படி போடு - வாத்தி Coming

வயலினில் குட்டி ஸ்டோரி பாட்டை இசைத்து, நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு சிறப்பான பிறந்த நாள் பரிசை கொடுத்திருந்தார்.

இந்நிலையில், கோமாளி படத்தின் இரண்டாவது ஹீரோயின் சம்யுக்தா ஹெக்டே வாத்தி கம்மிங் பாட்டுக்கு அசத்தலாக ரிங் டான்ஸ் ஆடி பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

சோஷியல் மீடியா கிங்

சோஷியல் மீடியா கிங்

சோஷியல் மீடியா கிங்காக இருக்கும் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, எக்கச்சக்க ஹாஷ்டேக்குகள், ஸ்பெஷல் போஸ்டர் என விஜய் பிறந்தநாள் கொண்டாட்டமாகவே சமூக வலைதளங்கள் நேற்றைய தினம் நிறைந்து இருந்தது. தனது பிறந்தநாளை விஜய் கொண்டாட வேண்டாம் என கேட்டுக் கொண்டாலும், ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கோமாளி ஹீரோயின்

கோமாளி ஹீரோயின்

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சாரா, கே.எஸ். ரவிக்குமார் நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் இரண்டாவது ஹீரோயினாக சம்யுக்தா ஹெக்டே நடித்திருந்தார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பப்பி படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷலாக வாழ்த்து வீடியோ ஒன்றை அவர் போட்டுள்ளார்.

ரிங் டான்ஸ்

ரிங் டான்ஸ்

வாத்தி கம்மிங் பாடலுக்கு, உலகம் முழுக்க பல பிரபலங்கள் நடனமாடி பல வீடியோக்களை வெளியிட்டு வைரலாக்கி உள்ளனர். சமீபத்தில், ஷில்பா ஷெட்டி நடனமாடி இருந்தார். நேற்று முன் தினம் அஸ்வின் குமார் ஆடிய ட்ரெட் மில் டான்ஸ் வீடியோவும் டிரெண்ட் ஆனது. இந்நிலையில், ரிங் ஒன்றை வைத்துக் கொண்டு சம்யுக்தா வாத்தி கம்மிங் பாட்டுக்கு செம குத்து குத்தியுள்ளார்.

ஆடாமல் அசையாமல்

ஆடாமல் அசையாமல்

நீண்ட வளையம் ஒன்றை தனது தலையில் வைத்துக் கொண்டு, அது, ஆடாமல் அசையாமல் கீழே விழாமல், ரொம்ப நேக்காக, மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள தளபதி விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு, அந்த வளையத்தை வைத்து என்ன எல்லாம் வித்தை காட்ட முடியுமோ, வளைந்து, நெளிந்து, குதித்து செம வீடியோ போட்டு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் சம்யுக்தா ஹெக்டே.

ஆஸம்

நடிகர் விஜய்யின் 46வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இப்படியொரு அசத்தலான நடனத்தை ஆடி அதனை வீடியோவாக ஷேர் செய்திருந்த நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் திறமையை கண்டு பல விஜய் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். ஆஸம் என்றும், நன்றி என்றும், நல்லா சர்கஸ் பண்றீங்க என்றும் கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X