மகனுக்காக கோமாளியை கையில் எடுக்கும் போனி கபூர்

மும்பை: அஜித்திற்காக பிங்க் படத்தை கையில் எடுத்த போனி கபூர், தற்போது தன் மகன் அர்ஜுன் கபூருக்காக கோமளி படத்தை கையில் எடுத்துள்ளார்.

சமீபத்திய வெளியான, ஜெயம் ரவியின் கோமளி திரைப்படம், பார்வையாளர்களின் சிறந்த விமர்சனங்களுடன் சூப்பர் ஹிட்டாக அமைந்துள்ளது. படம் வெளியாகி ஆறு வாரங்களுக்குப் பிறகும் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

comali hindi remake

படம் நல்ல லாபம் ஈட்டித்தந்ததால், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இயக்குநர் பிரதீப்பிற்கு கார் ஒன்றை பரிசளித்தார். சமீபத்திய செய்தி என்னவென்றால், கோமாளியின் இந்தி ரீமேக் உரிமையை போனி கபூர் வாங்கியுள்ளார். இந்த செய்தியை படத்தின் இயக்குனர் உறுதிப்படுத்தியுள்ளார்.

comali hindi remake

தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஆம், கோமாளி படம் இந்தியில் ரீமேக் ஆகப் போகிறது. இதை போனி கபூர் சார் வாங்கியுள்ளார். அவரது மகன் அர்ஜுன் கபூர் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்தியில் காண காத்திருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

comali hindi remake

இதற்கு நடிகர் ஜெயம் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து, மீண்டும் ஹெச் வினோத் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X