twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என் அப்பாவுக்கு கொரோனா.. ரெம்டெசிவர் மருந்து வேணும்.. பளீஸ் ஹெல்ப் பண்ணுங்க.. கெஞ்சும் பிரபல நடிகை!

    |

    சென்னை: கோமாளி பட நடிகையான சம்யுக்தா ஹெக்டேவின் பெற்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் மிரட்டி வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    ரூ.6 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய பிரபாஸ்...டிரெண்டிங் ஆகும் ஃபோட்டோஸ் ரூ.6 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய பிரபாஸ்...டிரெண்டிங் ஆகும் ஃபோட்டோஸ்

    பல மாநிலங்களில் அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகள் என அனைத்தும் நிரம்பி வழிகிறது. கொரோனா தொற்றால் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    காத்துக்கிடக்கும் மக்கள்

    காத்துக்கிடக்கும் மக்கள்

    இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இறந்தவர்களை தகனம் செய்யக்கூட தகனமேடை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். பல இடங்களில் ரெம்டெசிவர் மருந்து கிடைக்காமல் மக்கள் காத்துக்கிடக்கின்றனர்.

    கோமாளி பட நடிகை

    கோமாளி பட நடிகை

    கொரோனாவால் சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோலிவுட்டிலும் பல பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோமாளி படத்தில் நடித்த நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் பெற்றோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ரெம்டிவ்ஸிவிர் தேவை

    ரெம்டிவ்ஸிவிர் தேவை

    தனது பெற்றோருக்கு வீட்டிலேயே சிகிச்சையளித்து வருவதாக தெரிவித்துள்ள சம்யுக்தா ஹெக்டே, சமூக வலைதளம் மூலம் உதவி கோரியுள்ளார். அதாவது தனது தந்தை தற்போது ரெம்டெசிவர் ஊசியின் தேவையில் இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

    தயவு செய்து உதவுங்கள்

    தயவு செய்து உதவுங்கள்


    எனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் கேட்டுவிட்டேன் கிடைக்கவில்லை, தயவு செய்து உதவுங்கள் என கேட்டுள்ளார். மேலும் தனது தந்தை மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்ப்பதால் அவரை வீட்டில் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தனக்கு வீட்டில் 6 குப்பிகள் தேவை என்றும் பதிவிட்டுள்ளார்.

    English summary
    Comali movie actress Samyuktha Hegde's parents tested Covid 19 positive. She is seeking help that her father is in a major need for the Remdivsivir injection.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X