அப்பா இறந்து 2 மாசமாச்சு.. கனத்த இதயத்துடன் வாரணாசியில் இந்திரஜா சங்கர்.. ஏன் தெரியுமா?
சென்னை: பாடிபில்டராக தனது பயணத்தை தொடங்கிய ரோபோ சங்கர். கடுமையாக உழைப்பாலும், திறமையாலும் தனக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். சின்னத்திரையில் தனது திறமையை நிரூபித்த ரோபோ சங்கர், சினிமாவிலும் பல முன்னணி நடிகர்களில் படங்களில் நடித்தார். திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர் கடந்த செப்டம்பர் மாதம் உயிரிழந்தார். இவரின் இழப்பை ஈடுசெய்ய முடியாமல் இவரின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர்.
நடிகர் ரோபோ சங்கர் சில ஆண்டுகளுக்கு முன் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தார். அவர் இந்த நோயில் இருந்து மீட்டு கொண்டு வந்தது பிரியங்கா தான், அருகில் இருந்து அவரை கவனித்து அவரை நல்லபடியாக குணப்படுத்தினார். இதையடுத்து, மகள் இந்திரஜாவின் திருமணத்தை கண் குளிர பார்த்து, பேரனையும் கையில் எடுத்து கொஞ்சிவிட்டார்.

ரோபோ சங்கர்: கடந்த செப்டம்பர் மாதம், படப்பிடிப்பில் மயங்கி விழுந்ததை அடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையின் தகவலின்படி, அவரது இரைப்பை மற்றும் குடலில் ஏற்பட்ட ரத்தக் கசிவும், பல உடல் உறுப்புகள் செயலிழந்ததும் காரணமாக அவரின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த நிலையில் உயிரிழந்தார். அவரின் உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, வளவசரவாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
துயரத்தில் குடும்பத்தினர்: ரோபோ சங்கர் அவரது குடும்பத்தினரை பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரின் மறைவில் இருந்து மீள முடியாமல் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை சமாளிப்பதற்காக பிரியங்கா தற்போது புதிதாக ஒரு யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி இருக்கிறார். இந்நிலையில், ரோபோ சங்கர் உயிரிழந்து 2 மாதங்கள் ஆன நிலையில், அவரின் அஸ்தியை கங்கையில் கரைப்பதற்காக கனத்தை இதயத்துடன் குடும்பத்தினர் வாரணாசி சென்றுள்ளனர். இந்திரஜா தனது இன்ஸ்டாகிராமில் வாரணாசி சென்று இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











