அஜித்திற்கு தகுதியே இல்ல..அவரை புறக்கணிக்கணும்.. கடுப்பான பிரபலம்!

சென்னை: நடிகர் அஜித் சினிமாவில் தனக்கு என்று தனி பாலிசி வைத்துக்கொண்டு அதை கடைபிடித்து வருகிறார். இது பல நேரங்களில் சர்ச்சைக்குள்ளாகி விடுகிறது. விஜயகாந்த் இறப்புக்கு பெரும்பாலும் அவருடன் நடித்த முன்னணி நடிகர்கள் அனைவரும் வந்திருந்தனர். வரமுடியாதவர்கள் வீட்டுக்கு சென்று ஆறுதல் தெரிவித்தார். இதுநாள் வரை அஜித் அதை செய்யவே இல்லை. இதுகுறித்து, வலைப்பேச்சு அந்தணன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அஜித்தின் சமீபகால நடவடிக்கைகள் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த தமிழ் சினிமாவில் இருந்து கொண்டு தமிழ் சினிமாவால் பணம் சம்பாதிக்கிறார். ஆனால் தமிழ் சினிமாவை துளி கூட மதிக்க மாட்டேன் என இருக்கும் ஒரே நடிகர் தான் அஜித். இதனால் தான் அஜித்தை புறக்கணிப்போம் வாங்க என சொல்கிறேன். தமிழ் சினிமாவை மதிக்க மாட்டேன், தமிழ் சினிமாவை எட்டி உதைப்பேன். ரசிகர்களை மதிக்க மாட்டேன் என ஒரு நடிகர் இருக்கிறார். அவரை உச்சத்தில் வைத்து கொண்டாடும் ரசிகர்களை திருத்துவதுதான் என் கடமை. இதனால், தான் அஜித் ரசிகர்கள் கொந்தளித்து என்னை திட்டுவார்கள் அது பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால், இதன் மூலம் ஒரு சில ரசிகர்கள் திருந்துவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு.

come lets boycott ajith valai pechu anthanan speech

கடமையை சரியா செய்தா போதும்: அஜித்தின் ஒரு பழைய பேட்டி ஒன்று பார்த்தேன். அதில் அவர், 'அவரவர் கடமையை சரியாக செய்தால் போதுமானது' என பேசி இருந்தார். இதில் என்னுடைய கேள்வி என்னவென்றால், நீங்க முதலில் உங்க கடமையை செய்தீர்களா? எந்தப் படத்திலேயாவது டை அடித்துக் கொண்டு நடிக்கிறீர்களா? இயக்குனர் கதை எழுதும் போது அந்த நடிகன் இப்படி இருக்க வேண்டும், இந்த மாதிரியான உடை அணிய வேண்டும் என்றெல்லாம் நினைத்துதான் கதை எழுதுவான். ஆனால், நீங்க எந்த படம் நடிச்சாலும் ஒரே மாதிரி இருக்கீங்க, அவர்களுக்கு நீங்கள் சுதந்திரம் கொடுக்கிறீர்களா? நீங்க கடமையை பத்தி பேசுறீங்க?

எஸ்.ஜே.சூர்யா இல்லைனா வாலி இல்லை: நடிகர் சங்கத் தலைவராக இருந்தவர் விஜயகாந்த். அவரின் இறப்பிற்கு நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் வந்து அஞ்சலி செலுத்துவது கடமை. இந்த கடமையை செய்தாரா? அவருடைய ஒரு பேட்டியிலாவது என்னை வளர்த்து விட்டவர்கள் இவர்கள்தான் என வாய்தவறியாவது சொல்லியிருப்பாரா? எஸ்.ஜே.சூர்யா இல்லைனா ஒரு வாலி இல்லை. முருகதாஸ் இல்லைனா ஒரு தீனா இல்லை. இதெல்லாம் அஜித்துக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய படங்கள். ஆனால் அதை பற்றி எங்கேயாவது சொல்லியிருப்பாரா?

தகுதியே இல்லாத ஆளு: பெரிய பெரிய நட்சத்திரங்களான ரஜினி, கமல் பாலசந்தரை இன்றளவும் மனம் உருகி பேசி வருகிறார்கள். ஆனால் அஜித்? அதுமட்டுமில்லாமல் அஜித்தோடு பின்னிப்பிணைந்த ஒன்றாக பணியாற்றியவர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. அவர் மறைவுக்கு வந்தாரா? எவ்வளவுதான் பிரச்சினைகள் இருந்தாலும் ஒரு காலத்தில் நண்பராய் இருந்தார் என்பதற்காகவாவது வந்திருக்கலாமே? இப்படி இருக்கும் நபரை நாம் எப்படி மதிப்பது? கடமையை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாத ஆளு அஜித். எந்தப் பட ப்ரோமோஷனுக்கும் வருவது இல்லை. அதை ஒரு கொள்கையாகவே வைத்துக் கொண்டு சுற்றும் ஒரே நடிகர் அஜித். இப்படிப்பட்டவரை கண்டிப்பாக நாம் புறக்கணிக்க வேண்டும் என அந்தணன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X