உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு!

லாஸ் ஏஞ்சல்ஸ்: கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட நடிகர் அர்னால்டு தனது டெர்மினேட்டர் படத்தின் வசனத்தை பேசி உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்களும், ஐயங்களும் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் உலகளவில் ஏகப்பட்ட பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், மருத்துவர்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசியை போட்டு வருகின்றனர்.

கொரோனா எனும் கொடிய நோயில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல லட்சம் மக்களை

பல லட்சம் மக்களை

கடந்த 2020ம் ஆண்டையே சூனியமாக்கி விட்டது கொரோனா எனும் கொடிய வைரஸ். சீனாவில் இருந்து பரவியதாக நம்பப்படும் கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளை கடந்த ஆண்டு பல மாதங்களாக முடக்கிப் போட்டது. கொரோனாவிற்கு மருந்து கண்டு பிடிக்கவும், தடுப்பூசி கண்டுபிடிக்கவும் ஏகப்பட்ட நாடுகள் போராடி வருகின்றன. பல லட்சம் உயிர்களை காவு வாங்கிய கொரோனாவுக்கு சில மருத்துவ நிறுவனங்கள் வெற்றிகரமாக தடுப்பூசியையும் கண்டு பிடித்துள்ளன.

சந்தேகத்தை போக்க

சந்தேகத்தை போக்க

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் பின் விளைவுகள் ஏதாவது வருமா? பாதிப்பு ஏற்படுமா? என ஏகப்பட்ட சந்தேகங்கள் மக்கள் மனதில் எழுந்து நிற்கிறது. அதனை போக்க உலகத் தலைவர்கள் பலரும் கொரோனா தடுப்பூசியை முன் வந்து போட்டு வருகின்றனர். பிரபல நடிகர்களும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டு மக்களின் அச்சத்தை போக்கி வருகின்றனர்.

தடுப்பூசி போட்ட அர்னால்டு

தடுப்பூசி போட்ட அர்னால்டு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டாட்ஜர் ஸ்டேடியம் எனும் இடத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் ட்ரைவ் இன் கொரோனா தடுப்பூசி மையத்திற்கு காரில் சென்ற நடிகரும் முன்னாள் கவர்னருமான அர்னால்டு தடுப்பூசி போட்டுக் கொண்டார். 73 வயதாகும் அர்னால்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.

டெர்மினேட்டர் வசனம்

மேலும், தடுப்பூசியை போட்டுக் கொண்ட நடிகர் அர்னால்டு தான் நடித்து உலகளவில் பிரம்மாண்ட வெற்றியை பெற்ற டெர்மினேட்டர் படத்தின் வசனமான 'Come with me if you want to live' (உயிர் வாழணும்னா என் கூட வாங்க) எனும் வசனத்தை பேசியது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஊக்கமாக இருக்கும்

ஊக்கமாக இருக்கும்

பிரபல ஹாலிவுட் நடிகர்களான டாம் ஹேங்ஸ், டுவைன் ஜான்சன் என ஏகப்பட்ட பேர் கொரோனா பாதிப்பில் சிக்கி மீண்டுள்ளனர். நம்ம நாட்டிலும் கொரோனா பாதிப்புக்கு அமிதாப் பச்சன் முதல் ரகுல் ப்ரீத் சிங் வரை சிக்கி உள்ளனர். கொரோனா பரவலை தடுக்க மாஸ்க் போடுங்க என விளம்பரப்படுத்தியது போல, இப்படி பிரபலங்கள் முன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், மக்கள் அச்சமின்றி நம்பிக்கையுடன் தடுப்பூசி போட முன் வருவார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X