கடைகுட்டி செல்லம்..வடிவேலுவின் மகளுக்கு கிலோ கணக்கில் நகை போட்டு திருமணம்..தீயாய் பரவும் புகைப்படம்!

சென்னை : காமெடி நடிகர் வடிவேலு தனது மகளுக்கு கிலோ கணக்கில் திருமணத்திற்கு நகைபோட்டு அழகு பார்த்துள்ளார். அந்த புகைப்படம் தற்போதும் இணையத்தில் கட்டுத்தீயாய் பரவி உள்ளது.

தமிழ் சினிமாவில் வடிவேலுவை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது, இவரது நகைச்சுவையான பேச்சு மட்டுமன்றி இவரது உடல் அசைவுகளை பார்த்தாலே போதும் குபீரென்று சிரிப்பு வந்துவிடும்.

நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலுவின் நடிப்பில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

வைகை புயல் வடிவேலு

வைகை புயல் வடிவேலு

வைகை புயல் வடிவேலு 1960ம் ஆண்டு செப்டம்பர் 12ந் தேதி நடராஜன் பிள்ளை மற்றும் வைத்தீஸ்வரி ஆகியோருக்கு மகனாக பிறந்தார். நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட வடிவேலு கிராமத்தில் இருக்கும் போதே சிறுசிறு கதாபாத்திரத்தில் மேடை நாடகங்களில் நடித்துள்ளார். இதையடுத்து,ராஜ்கிரண் அலுவலகத்தில் உதவியாளராக வேலைக்கு சேர்ந்தார்.

முதல் படத்திலேய பாடினார்

முதல் படத்திலேய பாடினார்

அதன் பின் 1991 ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில், ராஜ்கிரண் தயாரித்து கதாநாயகனாக நடித்த என் ராசாவின் மனசிலே படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்தது மட்டுமில்லாமல், போடா போடா புண்ணாக்கு பாடலையும் பாடி முதல் படத்திலேயே பாடகராகவும் அறிமுகம் ஆனார்.

அசாத்திய திறமை

அசாத்திய திறமை

முதல் படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து சின்னக்கவுண்டர் படத்தில் விஜய்காந்துக்கு குடைபிடிக்கும் நபராக நடித்திருந்தார். செந்தில்,கவுண்ட மணி காமெடி நடிகர்களாக பீக்கில் இருந்த காலகட்டத்தில், தனது அசாத்தியமான நடிப்பால், மக்கள் மனதில் தனக்கு என்று தனி இடத்தைபிடித்தார். வடிவேலுவை பொறுத்தவரை அவரது நகைச்சுவை உடல்மொழியை அடிப்படையாக கொண்டது. சொல்லப்போனால் அவரை மக்களிடம் கொண்டு சேர்த்ததும் அந்த உடல்மொழிதான்.

3 மகள், ஒரு மகன்

3 மகள், ஒரு மகன்

நடிகர் வடிவேலுவுக்கு சரோஜினி என்ற மனைவியும் கன்னிகாபரமேஸ்வரி, கார்த்திகா, கலைவாணி என்ற மகள்களும், சுப்ரமணியன் என்ற ஒரு மகனும் உண்டு. திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சியில் இருந்த போதும், தனது கடந்த காலத்தை மறக்காமல், மகன் சுப்ரமணியனுக்கு சிவகங்கை அருகே உள்ள ஒரு ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தார்.

கிலோ கணக்கில் நகை

கிலோ கணக்கில் நகை

அதேபோல கன்னிகா பரமேஸ்வரி,கார்த்திகா, கலைவாணி என்ற மூன்று மகள்களுக்கும் எப்போதோ திருமணம் செய்து முடித்து விட்டார். இதில் தனது கடைகுட்டி செல்ல மகளான கலைவாணிக்கு தனது ஆசைப்படி கடந்த சில வருடங்களுக்கு முன்பு கிலோ கணக்கில் நகைபோட்டு திருமணம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X