டிடி ரிட்டர்ன்ஸ் படத்திற்கு சந்தானம் வாங்கிய சம்பளம்… சோஷியல் மீடியாவில் வெளியான தகவல்!
சென்னை: நடிகர் சந்தானம் டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தில் நடிக்க வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் சந்தானம். ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து காமெடியனாக நடித்துள்ளார்.
தனது நகைச்சுவையால் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்த சந்தானம், தற்போது ஹீரோ அவதாரம் எடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் சந்தானம்: வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள். ஆனால், நம்மில் பலர் வாய்விட்டு சிரிப்பதே இல்லை. வேலைபளு, மன அழுத்தம், குடும்ப பிரச்சனை போன்றவற்றால் துவண்டுபோய் மருந்து, மாத்திரைகளுடன், மருத்துவமனைக்கு அலைந்த திரிந்து கொண்டு இருக்கிறார்கள். அப்படி பட்டவர்களுக்கு அருமருந்தாக இருக்கிறார் சந்தானம்.
ஹீரோவாக: நக்கல் பேச்சு, நையாண்டி, டைமிங்கில் ரைமிங் என இயல்பான உடல்மொழி மூலம் ரசிகர்களை கவர்ந்து, தனது காமெடியில் ரசிகர்களை மகிழ்வித்து வந்த சந்தானம் இப்போது, ஹீரோவாக நடித்து வருவதால் அவருடைய காமெடி திரையில் ரசிகர்களால் பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் ரசிகர்களுக்கு இருந்தது.

டிடி ரிட்டர்ன்ஸ்: சந்தானம் கதாநாயகனாக நடித்த சபாபதி, ஏஜென்ட் கண்ணாயிரம், குளுகுளு படங்கள் சரியாக ஒடவில்லை. இதையடுத்து, சந்தானம் நடிப்பில் இன்று டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வெளியாகி உள்ளது. இத்திரைப்படம் சந்தானம் ஹீரோவாக நடித்து வெற்றிப்பெற்ற தில்லுக்கு துட்டு படத்தின் மூன்றாம் பாகம் ஆகும். இப்படத்தில், சுரபி, ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சந்தானத்தின் சம்பளம்: இன்று வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படத்திற்கு மக்களிடம் இருந்து கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில், டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிக்க சந்தானம் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்காக அவர் ரூ.5 கோடி சம்பளமாக வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











