நடிகர் சேஷுவின் உடல் நல்லடக்கம்.. குடும்பத்தினர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி!

சென்னை: தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நகைக்சுவை சேஷுவின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு பல ஆண்டுகளாக போராடி முன்னேறி சேஷுவின் மரணம் அவரது ரசிகர்களை மட்டுமல்லாது சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சேஷு, பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். சந்தானத்துடன் நினைத்து A1, பாரீஸ் ஜெயராஜ், குலுகுலு போன்ற படங்களில் நடித்துள்ளார். அண்மையில் சந்தானம் நடிப்பில் வெளியான வடக்குபட்டி ராமசாமி படத்தில் சேஷூ ஒரு முக்கியதான கேரக்டரில் நடித்திருந்தார்.

comedian and Lollu Sabha fame Seshu burial at chennai

நகைச்சுவை நடிகர் சேஷு: இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி அவர் பள்ளிக்கரணையில் உள்ள வீட்டில் இருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையில், இதயத்தில் மூன்று இடத்தில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு கடந்த பத்து நாட்களாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பண உதவி: அவர் சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டதால், டிக்கிலோனா பட இயக்குனர் கார்த்திக் பாபு, சேஷூவின் சிகிச்சைக்கு ரசிகர்களிடம் பண உதவி கேட்டு உருக்கமாக டிவீட் செய்துள்ளார். அதே போல, அமுதாவணன், ஜீவா போன்றவர்களும் அவருக்கு உதவும்படி வீடியோ வெளியிட்டு இருந்தனர். பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் பண உதவி அளித்து வந்த நிலையில் நேற்று சேஷு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

பதறிப்போன சந்தானம்: அவரது உடல் பள்ளிக்கரணையில் அவரது வீட்டில் நேற்று பொதுமக்களின் அஞ்சலிக்கா வைக்கப்பட்டது. இவர் உயிரிழந்த செய்தி கேட்டு பதறிப்போய் வந்த சந்தானம், அவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக என்னுடன் பயனித்துக்கொண்டு இருந்தார். வடக்குபட்டி ராமசாமி படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். டிடி ரிட்டன்ஸ் 2 படத்திலேயேவும் அவர் நடிக்க இருந்தார். அதற்குள் இப்படி ஆகிவிட்டது என்றார். மேலும், சேஷு மரண செய்தி கேள்விப்பட்ட நடிகர் ரவி மரியா, நடிகர் ஜீவா, நடிகர் மாறன் ஆகியோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

நல்லடக்கம்: நடிகர்கள்,நண்பர்கள், உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு இன்று காலை எட்டு மணி அளவில் இறுதிசடங்குக்கான சடங்குகள் செய்யப்பட்டு, அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த சேஷுவின் ஆன்மா சாந்தி அடைய பலர் இறைவனை பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X