நண்பன் அல்வா வாசு சாவுக்கு வராத வடிவேலுவா... என்ன காப்பாத்த போறாரு..பாவா லட்சுமணன் பேட்டி!

சென்னை : நகைச்சுவை நடிகரான பாவா லட்சுமணன் வடிவேலு, விவேக் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது படவாய்ப்பு இல்லாமல் இருக்கும் பாவா லட்சுமணன் மருத்துவ செலவுக்குக் கூட காசு இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்.

Comedian Bhava Lakshmanan interviewed about actor Vadivelu

விவேக், மயில்சாமி ஆகியோர் தனக்கு பல மருத்துவ உதவிகளை செய்ததாகவும், வடிவேலு தனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

வாமா மின்னல் : நகைச்சுவை நடிகரான பாவா லட்சுமணன், இவர் சரத்குமார் நடித்த ஐயா படத்தில், மாயி அண்ணன் வந்திருக்காக மாப்பிள்ளை மொக்கச்சாமி வந்திருக்காக மற்றும் நம் உறவினர்கள் எல்லாம் வந்து இருக்காக வாமா மின்னல் என்ற நகைச்சுவை மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். அந்த படத்திற்கு பிறகு வடிவேலு, விவேக்குடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காயப்படுத்திய வடிவேலு : தற்போது படவாய்ப்பு இல்லாமல் இருக்கும் பாவா லட்சுமணன் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தற்போது படவாய்ப்பு இல்லாமல் இருக்கிறேன். வடிவேலு அண்மையில் நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு சென்றேன் கூப்பிடுறேனு சொன்னாரு ஆனால், கூப்பிடவில்லை. பல முறை வாய்ப்பு கேட்டுசென்ற போதெல்லாம் ஆபிஸ் பக்கம் வராதே என்று சொல்லி மனதை காயப்படுத்தி இருக்கிறார்.

குறைந்த சம்பளம் : நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் வடிவேலுவுடன் சேர்ந்து நடித்த காமெடியன்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது. ஆனால், நாங்கள் வடிவேலுவுடன் நடிக்கும் போது வெறும் 5 ஆயிரம் தான் தருவார்கள். அதைவிட பெரிய வருத்தம் என்னவென்றால் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் பழைய நகைச்சுவை நடிகர்களே இல்லை என வடிவேலு பேட்டி அளித்தது தான் மிகவும் வருத்தமாக இருந்தது.

சாப்பாடு போட்ட விவேக் : கொரோனா காலத்தில் நான் இறந்து விட்டேன் என்று கூட செய்தி பரவியது, அந்த நேரத்தில் எனக்கு சாப்பாடு போட்டது விவேக், மயில்சாமி, மனோபாலா தான். இவர்களை வாழ்க்கையில் என்றும் மறக்கவே மாட்டேன். மயில்சாமி அவர்கள் எனக்கு சுகர் மாத்திரை எல்லாம் வாங்கி கொடுத்தார். ஷூட்டிங் இல்லாத நேரத்தில் மயில்சாமிக்கு போன் பண்ணா போதும், கவரில் பணத்தை வைத்து கொடுத்துவிடுவார்.

நண்பன் சாவுக்கு போகாத வடிவேலு : அதே போல சிங்கமுத்துவும் எனக்கு நிறைய பண உதவி செய்து இருக்கிறார். ஆனால், வடிவேலுக்கூட இத்தனை படங்கள் நடித்த போதும் அவர் எந்த உதவியும் செய்தது இல்லை. வடிவேலுவின் நெருங்கிய நண்பன் அல்வா வாசுவின் சாவுக்கே போகாத வடிவேலுவா எனக்கு உதவி செய்யப்போகிறார் என்று மன வருத்தத்துடன் பாவா லட்சுமணன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X