சாம்ஸ் பெயர் செட்டாகல.. விஜயதசமி அதுவுமா பெயரை மாத்திட்டாரே.. அதுவும் அந்த பெயரா?

சென்னை: நகைச்சுவை நடிகர் சாம்ஸ் குறித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பலருக்கும் தெரியும். தனித்துவமான நகைச்சுவை பாணியைக் கொண்டுள்ள அவருக்கு, அவர் நடித்த கதாபாத்திரங்களிலேயே மிகவும் பெயர் வாங்கிக் கொடுத்த கதாபாத்திரங்களில் ஒன்று, ஜாவா சுந்தரேசன். அப்படி இருக்கும்போது இவர் விஜயதசமியான இன்று அதாவது, அக்டோபர் 2ஆம் தேதி தனது பெயரை மாற்றி வைத்துக் கொண்டுள்ளார். இது மட்டும் இல்லாமல் தனது பெயரை மாற்றியதற்கான காரணத்தையும் சொல்லி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " இந்த நல்ல நாள்ல என்னுடைய பெயர் மாற்றம் குறித்து உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். எனது இயற்பெயர் சாமிநாதன். இந்த சராசரிப் பெயருடன் தான் நான் சினிமாவுக்குள் நுழைந்தேன். ஆனால் நான் தனித்துத் தெரிய, சாம்ஸ் என்று எனது பெயரை மாற்றி வைத்துக் கொண்டேன்.

Comedy Actor Chaams Change His Name As Java Sundaresan Which Is His Character Name From Arai En 305-il Kadavul

ஜாவா சுந்தரேசன்: நான் இந்த பெயரில்தான் சுமார் 220 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். ஆனால் இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான படமான அறை எண் 305இல் கடவுள் என்ற படத்தில் நான் ஜாவா சுந்தரேசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்த கதாபாத்திரத்தில் நான் நடித்த பின்னர் பலரும் என்னை எங்கு பார்த்தாலும், சாம்ஸ் என்று அழைப்பதை காட்டிலும் ஜாவா சுந்தரேசன் என்று அழைக்கத் தொடங்கிவிட்டனர்.

சிம்பு தேவன்: அதனால் பெரிய யோசனைக்குப் பிறகு இந்த கதாபாத்திரத்தை வடிவமைத்த இயக்குநர் சிம்புதேவன் சாரைச் சந்தித்து, அவரிடம் முறையாக அனுமதியும் ஆசிர்வாதமும் வாங்கி, இன்று முதல் எனது பெயரை ஜாவா சுந்தரேசன்னு மாத்திக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். இப்படிப்பட்ட அருமையான கதாபாத்திரத்தையும் பெயரையும் கொடுத்த சிம்பு தேவன் சாருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். அறை எண் 305இல் கடவுள் படத்தின் தயாரிப்பாளர் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் சாருக்கும் எனது நன்றிகள். மக்களை மகிழ்விக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள்.

Comedy Actor Chaams Change His Name As Java Sundaresan Which Is His Character Name From Arai En 305-il Kadavul

மீம் கிரியேட்டர்கள்: ஜாவா சுந்தரேசன் கதாபாத்திரத்தை கொண்டு பல மீம்ஸ்களை உருவாக்கி, தங்களது கற்பனைகளை எல்லாம் கொட்டி அதிக மீம்ஸ்களை உருவாக்கிய மீம் கிரியேட்டர்கள் அனைவருக்கும் நன்றிகள். இன்றில் இருந்து ஜாவா சுந்தரேசனாக எனது திரைப்பயணத்தை நான் தொடங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது. பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X