மாணவர்களுக்கு படிப்புதான் முக்கியம்.. இடுப்பு இல்லை..வாத்தி படம் குறித்து கூல் சுரேஷ் பேச்சு!

சென்னை : தனுஷ் நடித்த வாத்தி படம் பார்த்த கூல் சுரேஷ் மாணவர்களுக்கு படிப்புதான் முக்கியம், இடுப்பு முக்கியம் இல்லை என அதிரடியாக டிஆர் போல பேசினார்.

வெங்கட் அட்லுரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழியில் வெளியானத் திரைப்படம் வாத்தி. இப்படத்தில் சம்யுக்த்தா, சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள, படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

தனுஷின் வாத்தி

தனுஷின் வாத்தி

தனுஷ் வாத்தியாராக நடித்திருக்கும் இப்படம் கல்வி வியாபாரமாகி வருவதை அப்பட்டமாக சொல்லி உள்ளது. 90 காலகட்டத்தில் அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தை மக்கள் மத்தியில் செலுத்தின. அரசாங்க பள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்பட்டு, தனி பள்ளிகள் ஆங்காங்கே முளைத்து வருகின்றன.

தனுஷ் வெற்றி பெற்றாரா?

தனுஷ் வெற்றி பெற்றாரா?

தனியார் பள்ளியில் துணை ஆசிரியராக வேலை செய்துவரும் தனுஷ் {பாலமுருகன்} சோழவரம் எனும் ஊரில் இருக்கும் அரசாங்க பள்ளிக்கு ஆசிரியராக அனுப்பப்படுகிறார். படிக்கவேண்டிய மாணவர்களை பணத்திற்காக அவர்களுடைய பெற்றோர்களே வேலைக்கு அனுப்புவதை பார்த்து அதிர்ச்சியடையும் தனுஷ் இதை உடனடியாக மாற்ற முயற்சி செய்கிறார். இந்த முயற்சியில் தனுஷ் எப்படி வெற்றி பெற்றார் என்பது தான் வாத்தி படத்தின் கதை.

அடியாத்தி... அடியாத்தி...

அடியாத்தி... அடியாத்தி...

பிப்ரவரி 17ந் தேதியான இன்று வெளியான படத்தை இன்று பார்த்த கூல் சுரேஷ், செய்தியாளர்களிடம் பேசினார். அதில், அடியாத்தி அடியாத்தி நான் பார்த்த படம் வாத்தி என்றார். மேலும், நான் இன்று படம் பார்க்க வந்தற்கு முக்கிய காரணமே தனுஷுடன் திருடா திருடி படத்தில் நடித்து இருந்தேன். அந்த படம் திரையரங்கில் பல நாட்கள் ஓடியாது.

கல்விதான் முக்கியம்

கல்விதான் முக்கியம்

அந்த படத்தில் நடித்த தனுஷ் அவர்கள் எப்படி இருந்தாரோ அப்படித்தான் இந்த படத்திலும் இருக்கிறார். தமிழில் இருந்து இந்திக்கு போய் ஹாலிவுட் போய் இன்னைக்கு டாப்பில் இருக்கிறார். தனுஷ் அவர்கள் வாத்தி படம் மூலமாக கல்வியின் முக்கியத்துவத்தை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஒரு நல்ல கருத்தான படத்தை கொடுத்து இருக்கிறார்.

படிப்பு தான் முக்கியம் இடுப்பு இல்லை

படிப்பு தான் முக்கியம் இடுப்பு இல்லை

படத்தை பார்த்தேன் படம் சூப்பரா இருக்கு, அனைவரும் தியேட்டர் வந்து வாத்தி படத்தை பாருங்க. மாணவர்களுக்கு கல்விதான் முக்கியம் செல்வி முக்கியம் இல்லை, அதே போல மாணவர்களுக்கு படிப்பு தான் முக்கியம் இடுப்பு இல்லை என்ற ஒரு மெசெஜ் சொல்லி இருக்காங்கா. இதுபோன்ற படங்களை நாம வரவேற்க வேண்டும் என்றார் கூல்சுரேஷ் பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X