காமெடியன் டூ தயாரிப்பாளர்… சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷல்!
சென்னை : திறமையும், நம்பிக்கையும் இருந்தால் ஒரு கலைஞன் எந்த உச்சத்தையும் தொட்டுவிடலாம் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
காமெடியன், தொகுப்பாளர், நடிகர், பாடகர், பாடலாசிரியர் இன்று தயாரிப்பாளர் என கோலிவுட் சினிமாவில் தனக்கான இடத்தை அழுத்தமாக பிடித்து தவிர்க்க முடியாத கலைஞனாக மாறியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 37வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல திரைப்பிரபலங்கள் பிறந்த நாள் வாழ்த்து கூறிவருகின்றனர்.

காமெடியன்
விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் பத்து பேரில் ஒருவராக வந்து, தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன், இன்று அனைவரும் வியந்து பாராட்டும் வகையில் நடிகர்,பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என இமாலய உச்சத்தில் இருக்கிறார்.

வெள்ளித்திரையில்
3 திரைப்படத்தில் தனுஷூடன் நண்பனாக வெள்ளித்திரையில் கால்பதித்தார் சிவகார்த்தியேன். சின்னத்திரையில் ஜொலித்தவர்களால் வெள்ளித்திரையில் பிரகாசிப்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால், சிவகார்த்கேயனுக்கு இரண்டுமே சாத்தியமானது. இவரின் இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணம் அலட்டிக்கொள்ளலாத நடிப்பு, கலகலப்பான பேச்சு, பணிவான குணம் என்றே கூறலாம்.

பாடகராக
முதல் படத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்த சிவகார்த்திகயேன். மெரினா, மரம்கொத்தி பறவை படங்கள் நல்ல வசூலை பெற்றுத்தந்தன. வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம். அந்த பாடத்தில் ஊதா கலரு ரிப்பன் பாடலை பாடி பாடகராக தனது அடுத்த பரிமாணத்தை தொடங்கினார். மான் கராத்தே,, காக்கி சட்டை, ரஜினி முருகன், ரொமோ என அடுத்தடுத்து ஹிட் திரைப்படங்களை கொடுத்து வெற்றி மாலைகளை சூடினார் சிவகார்த்திகேயன்.

தயாரிப்பாளர்
நண்பர் அருண்ராஜா காமராஜாவுக்காக கனா திரைப்படத்தை தயாரித்து தயாரிப்பாளராக மாறினார். நெஞ்சமுண்டு நேர்மை உண்டு, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட 5 படங்களை தயாரித்துள்ளார். தற்போதும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும், கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸும் வைத்துள்ளார்.

பல படங்கள் கைவசம்
சிவகார்த்திகேயன் டாக்டர் படத்திற்கு வித்தியாசமான கதாபாத்திரத்தை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது இவர், டான், அயலான், நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம் என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக கைவசம் வைத்துள்ளார். மேலும், தெலுங்கில் ஜதிரத்னலு படத்தை கொடுத்த இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் அடுத்து தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்க இருக்கிறார். சிவகார்த்திகேயன் தெலுங்கில் நேரடியாக நடிக்கும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











