என் மனைவி போனது பெரிய இழப்பு.. கதறி அழும் காமெடி நடிகர் முத்துக்காளை.. அய்யோ பாவம்

சென்னை: தமிழ் சினிமாவில் காமெடி ரோல்களில் நடித்து பிரபலமானவர் முத்துக்காளை. இவரது மனைவி மாலதிக்கு சமீபமாக உடல்நிலை சரியில்லை. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. முதலமைச்சர் விஜய்யும் இதில் தலையிட்டு சிகிச்சைக்கான உதவிகளை செய்தார். இருப்பினும் கெடுவாய்ப்பாக சிகிச்சை பலனளிக்காமல் மாலதி உயிரிழந்தார். இந்நிலையில் தனது மனைவி குறித்து முத்துக்காளை எமோஷனலாக பேசியிருக்கிறார்.

சண்டை கலைஞராக வேண்டும் என்ற ஆசையோடு சினிமாவுக்கு வந்த முத்துக்காளை; நடிகராகிவிட்டார். வடிவேலு, விவேக் உள்ளிட்டோரின் காமெடி காட்சிகளில் நடித்த அவர்; வடிவேலுவின் செட்டில் முக்கியமான ஆளாக இருந்தார். இரண்டு பேரும் சேர்ந்து செய்த காமெடி காட்சிகள் இன்றுவரை பலரையும் சிரிக்க வைக்கின்றன. 'செத்து செத்து விளையாடுவோம்', 'சிக்கன் 65', 'பூசணிக்காயை உடைக்கும்போது பிடுங்கிக்கொண்டு போவது' போன்ற பல காமெடி காட்சிகள் பலமாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன.

Comedian Muthukalai Breaks Down After Wife Malathi s Death Thanks CM Vijay for Support
Photo Credit:

படிப்பிலும் கில்லி: சினிமாவுக்கு சிறு வயதிலேயே வந்ததால் முத்துக்காளையால் ஒழுங்காக படிக்க முடியவில்லை. இருப்பினும் படிப்புக்கு வயது தடை இல்லை என்பதை உணர்ந்த அவர்; சில வருடங்களுக்கு முன்பு சில டிகிரிகளையும் வாங்கினார். இந்த வயதிலும் ஆர்வம் குறையாமல் படித்து டிகிரி வாங்கியிருக்கும் அவரை பலரும் பாராட்டினார்கள். முன்னர் போல் சினிமா வாய்ப்புகள் அதிகம் வருவதில்லைதான்; இருப்பினும் படித்த டிகிரி தன்னை கைவிடாது என்ற நம்பிக்கையில் உற்சாகமாக இருந்தார்.

Also Read
Livingston daughter:
Livingston daughter: "லிவிங்ஸ்டன் மகளா இது?" உச்சு கொட்டும் ஃபேன்ஸ்!

மனைவி மருத்துவமனையில்: இப்படிப்பட்ட சூழலில் முத்துக்காளையின் மனைவிக்கு சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில், "என் மனைவிக்கு தலையில் ரத்த கசிவு ஏற்பட்டிருக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டாலும் கிருமி தொற்று காரணமாக மூச்சு விட சிரமப்படுகிறார். சுய நினைவும் இல்லை. மேல் சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். உரிய சிகிச்சை கிடைக்க முதலமைச்சார் விஜய் உதவ வேண்டும்" என தெரிவித்திருந்தார்.

உயிரிழந்த மாலதி: அதனையடுத்து அமைச்சர் ராஜ்மோகனையும் நேரில் அனுப்பி வைத்து தேவையன உதவிகள் கிடைக்கும்படி பார்த்துக்கொண்டார். சூழல் இப்படி இருக்க மாலதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு பிறகு வீடியோ வெளியிட்டிருக்கும் முத்துக்காளை, "அனைவருக்கும் வணக்கம். மூளையில் ரத்த கசிவு காரணமாக அறுவை சிகிச்சை நடந்தது. அவரை மீட்டெடுக்க எவ்வளவோ முயன்றேன். முதலமைச்சருக்கும் கோரிக்கை வைத்தேன். தமிழ்நாடு அரசு சார்பில் உயர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள்.

ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளும் நிலையில் மனைவியின் உடல்நிலை இல்லை. உதவி செய்ய சொன்ன விஜய்க்கும், நேரில் வந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கும் நன்றி. ஆதவ் அர்ஜுனாவும் ஃபோனில் அடிக்கடி தொடர்புகொண்டு பேசினார். மனைவி இறந்தது எனக்கு மிகப்பெரிய இழப்பு. எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. எனக்கு கேமராவுக்கு முன்புதான் நடிக்க தெரியும். பின்னால் நடிக்க தெரியாது. இந்த சோகத்திலிருந்து மீண்டு வருவதற்கு எனக்கு தோளோடு தோள் நின்றுவரும் அனைவருக்குமே எனது மனமார்ந்த நன்றி" என்று அழுதபடி பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X