இப்படி செய்வீங்கணு நினைக்கல..கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேனே..மேடையில் ஓபனா பேசிய ரெடின் கிங்ஸ்லி!
சென்னை: தனது தனித்துவமான நடிப்பாலும், வித்தியாசமான பேச்சாலும் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. அவர் கடந்த ஆண்டு சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணம் குறித்து பொது இடத்தில் வெளிப்படையாக பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தூத்துக்குடியைச் சேர்ந்த ரெடின் கிங்ஸ்லிக்கு சினிமா மீது ஆர்வம் இருந்ததால், அவள் வருவாளா என்ற படத்தில் க்ரூப் டான்ஸ் ஆடினார். அந்த படத்திற்கு பிறகு அவருக்கு படவாய்ப்பு இல்லாததால் சொந்த தொழிலை கவனித்து வந்தார். அதையடுத்து, கல்லூரி நண்பரான நெல்சன் சிம்புவை இயக்கிய வேட்டை மன்னன் படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் பாதியிலேயே நின்று போனது.

இதையடுத்து, நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் நடித்தார். அந்த படம் ரெடினுக்கு சினிமாவில் நல்ல பெயரைப்பெற்றுத்தந்தது. அதையடுத்து, சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில், அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது இவர் இல்லாத படங்களே இல்லை என்கிற நிலை ஏற்பட்டுளள்து.
பல படங்களில்: டாக்டர் படத்தைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த, ஜெய்லர் படத்திலும், விஜய்யின் பீஸ்ட், சிம்புவின் பத்து தல, விஷாலின் மார்க் ஆண்டனி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இவர் படத்தில் வந்தால் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது என்ற மைன்ட் செட்டுக்கு ரசிகர்கள் வந்துவிட்டதால், பல இயக்குநர்களின் முதல் சாய்சாக ரெடின் இருக்கிறார்.
திடீர் திருமணம்: இதையடுத்து, நடிகர் ரெடின் கிங்ஸ்லி கடந்த அண்டு இறுதியில், தனது நீண்ட நாள் காதலியான சீரியல் நடிகை சங்கீதாவை திடீரென திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் காதும் காதும் வைத்தது போல மிகவும் எளிமையாக நடந்து முடிந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மேலும், நடிகை சங்கீதா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்றும், அவர் 2009 கிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். 45 வயதாகும் நடிகை சங்கீதாவுக்கு ஷிவ்ஹியா என் மகள் இருக்கிறாள்.
அவசர திருமணம்: இந்நிலையில், நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை வழங்கி கௌரவித்தது. விருதை பெற்றுக்கொண்ட ரெடினிடம் திருமணம் குறித்து தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ரெடின், அடுத்தடுத்த படங்கள் கையில் இருந்தது, தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்ததால், டைம் இல்லாமல் அவசர அவசரமாக எங்களது திருமணம் நடந்தது என கூறினார்.
கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேன்: இதையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அந்த மேடையிலேயே ரெடினுக்கும் சங்கீதாவுக்கும் மறுபடியும் திருமணத்தை நடத்தி பார்க்க ஆசைப்பட்டு மாலையை கொடுத்து மாற்ற சொன்னார்கள். அதை சற்றும் எதிர்பார்க்காத ரெடின் கிங்ஸ்லி இது தெரிந்திருந்தால் நான் திருமணம் செய்திருக்க மாட்டேனே, திருமண செலவு மிச்சம், சாப்பாடு செலவு மிச்சம் என தனக்கே உரிய பாணியில் ஓபனாக மேடையில் பேசி அங்கிருந்தவர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











