என்னடா இப்படி ஆகிப்போச்சு.. ரோபோ சங்கருக்கு 2.5 லட்சம் அபராதம்!

சென்னை : அனுமதியின்றி வீட்டில் அலெக்சாண்டரியன் வகை கிளிகளை வளர்த்ததற்காக நடிகர் ரோபோ சங்கருக்கு வனத்துறை 2.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரோபோ சங்கர். இந்த நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

இரவின் நிழல், தி லெஜண்ட், கோப்ரா என அடுத்தடுத்த படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர் என பெயர் எடுத்துள்ளார் ரோபோ ஷங்கர். அவருடைய மகள் இந்துஜாவும் பிகில் மற்றும் விருமன் படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் ரோபோ ஷங்கர்

நடிகர் ரோபோ ஷங்கர்

நடிகர் ரோபோ ஷங்கரின் ஹோம் டூர் வீடியோவை யூடியூப் சேனல் ஒன்றில் புகழ் மற்றும் பாலா ஆகியோர் வெளியிட்டு இருந்தனர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, ரோபோ ஷங்கர் வீட்டில் பச்சை கிளிகள் வளர்ப்பது வனத்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து சில நாட்களுக்கு முன் அவரது வீட்டில் அதிரடியாக நுழைந்த வனத்துறையினர் கிளிகளை பறிமுதல் செய்து கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைந்தனர்.

ரோபோ ஷங்கர் விளக்கம்

ரோபோ ஷங்கர் விளக்கம்

வனத்துறையினர் வீட்டில் சோதனை செய்த போது, ரோபோ ஷங்கரும், அவரது மனைவியும் இலங்கையில் இருந்ததால், தொலைப்பேசியில் விளக்கம் கொடுத்தார். அதில், அலெக்சாண்டரியன் கிளி மனைவியின் தோழியுடையது என்றும், அவர் வெளிநாடு சென்று விட்டதால், கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த கிளியை வளர்த்து வருவதாகவும், அலெக்சாண்டரியன் வகை கிளியை வீட்டில் வளர்க்க அனுமதிவாங்க வேண்டும் என்பது தனக்கு தெரியாது என்றும், இதுகுறித்து, இலங்கையில் இருந்து வந்ததும் நேரில் வந்து விளக்கம் அளிப்பதாக ரோபோ சங்கர் கூறியிருந்தார்.

ரூ.2.5 லட்சம் அபராதம்

ரூ.2.5 லட்சம் அபராதம்

இதையடுத்து, இலங்கையில் இருந்து திரும்பிய ரோபோ ஷங்கர் வனத்துறையிடம் நேரில், விளக்கம் அளித்தார். ஆனால், ரோபோ ஷங்கரின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத வனத்துறை, உரிய அனுமதி வாங்காமல், வீட்டில் வெளிநாட்டு ரக கிளைகளை வளர்த்ததற்காக ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

ரொம்ப பெரிய தொகை

ரொம்ப பெரிய தொகை

கிளியை செல்லமாக வளர்த்து வந்தோம், விதி தெரிந்து இருந்தால் நிச்சயம் விட்டிருப்போம் இது தெரியாமல் நடந்த தவறு. ஏற்கெனவே, பறவைகளை வளர்த்திருந்தால் விதி என்ன என்று தெரிந்திருக்கும். ஆனால், இரண்டரை லட்சம் என்பது ரொம்பப் பெரியத்தொகை என்று ரோபோ ஷங்கரின் மனைவி வருத்தத்துடன் கூறியுள்ளார்.

 சட்டப்படி குற்றம்

சட்டப்படி குற்றம்

பறவைகளை வீட்டில் கூண்டில் அடைத்துவைத்து வளர்க்கும்போது அதனால் சுதந்திரமாக வெளியில் பறந்துபோக முடிவதில்லை. இதனால் அதன் இனப்பெருக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பச்சைக் கிளிகள் வீட்டில் வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது. வனவிலங்குகள் சட்டத்தின்படி 1972ல் பட்டியலிடப்பட்ட இந்திய பறவையான அலெக்சாண்டரியன் கிளியை வீட்டில் வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X