என்னுடைய அத்தியாயம் முடிந்துவிட்டது என பலர் சந்தோஷப்பட்டார்கள்… ரோபோ சங்கர் வேதனை !

சென்னை : என்னுடைய அத்தியாயமே முடிந்துவிட்டது என பலர் சந்தோஷப்பட்டார்கள் என நடிகர் ரோபோ சங்கர் பேட்டியில் வேதனையுடன் கூறியுள்ளார்.

ரோபோ சங்கர் உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால், இவர் உடல் நலம் குறித்து பலவிதமான வதந்திகள் இணையத்தில் பரவியது.

ஆனால், ரோபோ சங்கரின் மனைவி, அவர் ஒரு படத்தில் நடிப்பதால், உடல் எடையை குறைத்து வருவதாக விளக்கம் கொடுத்து இருந்தார்.

ரோபோ சங்கர் : இந்நிலையில் நீண்ட நாட்களாக மீடியாவில் தலைகாட்டாமல் இருந்த ரோபோ சங்கர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் மனம் திறந்து பல விஷயங்களை பேசி இருக்கிறார். நான் மஞ்சள் காமாலை நோயால் அதோடு உடல் எடையை குறைத்துக்கொண்டு இருந்தேன் இரண்டும் சேர்ந்து என்னை இப்படி ஆக்கிவிட்டது.

மீண்டு வந்தேன் : உடல் நலம்பாதிக்கப்பட்டதைவிட யூடியூப்பில் என்னைப்பற்றி வந்த வதந்தி தான் மிகவும் என்னை வேதனைப்படுத்தியது. ரோபோ சங்கரின் அத்தியாயம் முடிந்துவிட்டது, இனி ரோபோ சங்கர் அவ்வளவு தான் என பலர் சந்தோஷப்பட்டார்கள். ஆனால், என் மனைவி, என் குழந்தைகள் மற்றும் என்னுடைய நண்பர்களால் நான் பழையபடி மீண்டு வந்துள்ளேன்.

நகைச்சுவைதான் மருந்து : நான் எத்தனையோ பேரை சிரிக்க வைத்து அவர்களது மனக்கஷ்டத்தை போக்கி இருக்கிறேன். ஆனால் என்னுடைய மனக் கஷ்டத்தை போக்கியது விஜய் டிவி ராமர் தான். அவரின் காமெடியை அடிச்சுக்கவே முடியாது. அவரின் காமெடிகளை பார்த்து பார்த்து சிரித்து தான் நான் சீக்கிரம் குணமடைந்தேன்.

Comedian Robo Shankar Interview about his health issue

கெட்டப்பழக்கம் இருந்தது : இந்த பேட்டியின் போது உடன் இருந்த ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா, என் கணவரின் உடல்நிலை பற்றி இணையத்தில் வந்த செய்தியை பார்த்து நான் மிகவும் மனமுடைந்து போனேன். அவருக்கு சில கெட்டப்பழக்கம் இருந்தது உண்மைதான். யாருக்கு தான் கெட்டப்பழக்கம் இல்லை. பிரபலமாக இருப்பதால் வாய்ப்பு வந்ததை எழுதி, கஷ்டத்தில் இருப்பவர்களை மேலும் காயப்படுத்தலாமா? சோஷியல் மீடியா இன்று மிகப்பெரிய ஆயுதமாக இருக்கிறது. இதனால், உண்மை என்ன என்பதை தெரிந்து கொண்டு எழுதுங்கள் எதுவுமே தெரியாமல் தப்பான தகவலை பரப்பாதீங்க.

விரைவில் திருமணம் : மேலும் எங்கள் மகளுக்கு திருமணம் நடைபெறப்போவது உண்மைதான் அதற்கான தேதியை விரைவில் நாங்கள் அறிவிப்போம் நாட்டில் எத்தனையோ பெண்களுக்கு திருமணம் நடக்கிறது. ஆனால், பிரபலம் என்பதால் திருமண விஷயம் எப்படி பேசுபொருள் ஆகிவிட்டது இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் ரோபோ சங்கர் தன்னுடைய மகளுக்காக மூன்று கோடி ரூபாயில் கார் வாங்கியிருக்கிறார் என்றெல்லாம் தப்பு தப்பான செய்தி பரவி வருகிறது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X