படப்பிடிப்பில் மாரடைப்பு.. கொரோனாவில் இருந்து மீண்ட பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்!

By

பெங்களூரு: படப்பிடிப்பின்போது ஏற்பட்ட மாரடைப்பின்போது நகைச்சுவை நடிகர் ஒருவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல கன்னட காமெடி நடிகர், சுதாகர். வயது 65. ராக்லைன் சுதாகர் என்றால் இவரை நன்றாகத் தெரியும்.

ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் படங்களில் இவர் தவறாமல் இடம்பெறுவார் என்பதால் இந்த பெயர்.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அதில் இருந்து குணமடைந்த பின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இவர், சுகர்கிளாஸ் என்ற படத்தில் நடித்து வந்தார். இதில் பிருத்வி அம்பார் ஹீரோவாக நடிக்கிறார்.

மேக்கப் போட்டபோது

மேக்கப் போட்டபோது

பிரியங்கா திம்மேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தை கே.எம்.சசிதர் இயக்குகிறார். புஷ்கரா மல்லிகார்ஜுனையா தயாரிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் வழக்கம் போல இன்று சுதாகர் கலந்துகொண்டார். அவருக்கு மேக்கப் போடப்பட்டு கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உயிர் பிரிந்தது

உயிர் பிரிந்தது

அங்கு அவர் இறந்தார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து படப்பிடிப்பில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் மறைவு, கன்னட சினிமாவில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கன்னட நடிகர், நடிகைகள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா துறையில்

சினிமா துறையில்

கடந்த சில மாதங்களாக சினிமா துறையில் பலர் மரணமடைந்து வருகின்றனர். பிரபல மூத்த தெலுங்கு காமெடி நடிகர், வேணுகோபால் கோசுரு நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பில் மரணமடைந்தார். இன்று கன்னட நடிகர் காமெடி ராக்லைன் சுதாகர் உயிரிழந்து இருப்பது சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X