அப்பாவுக்கு ஷேவ்.. கன்னத்தில் புகுந்து விளையாடிய சதீஷ்.. வைரல் வீடியோ !
சென்னை: நகைக்சுவை நடிகர் சதீஷ் நகைச்சுவையான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
சதீஷ் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நகைச்சுவை நடிகர். கிரேஸி மோகனின் நாடக ட்ரூப்பில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக நடித்து வந்த சதீஷ், கிரேஸி மோகன் இயக்கத்தில் வெளியான ஜெர்ரி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது ரஜினியுடன் அண்ணாத்த திரைப்படத்தில் இணைந்து நடிக்கிறார். தமிழ் சினிமாவில் அனைவராலும் அறியப்படும் ஒரு முகம் என்றே சொல்லலாம். தன்னுடைய அனைத்து திரைப்படங்களிலும் டைமிங் காமெடி வைத்து பிரபலமானவர் பல சினிமா சொந்தங்களுடன் நெருங்கி பழகக்கூடியவர்.
இந்நிலையில் லாக்டவுன் காரணத்தால் தன் குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்து வருகிறார். தற்போது தன் தந்தைக்கு ஷேவ் செய்து விடும் வீடியோ காட்சி ஒன்றை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பல பிரபலங்கள் தாங்கள் வீட்டில் செய்யும் சேட்டைகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் சதீஷ் வெளியிட்ட வீடியோ அனைவரும் ரசிக்கும் படியாக இருக்கிறது. அந்த வீடியோவில் தன் தந்தையை நாற்காலியில் உட்கார வைத்து பின் அவருக்கு ஷேவ் செய்கிறார்.

ஒரு இடத்தில் நிற்காமல் வளைத்து வளைத்து ஷேவ் செய்கிறார். அவரின் தந்தை முகத்தில் சற்று பயம் இருப்பதை பார்க்கலாம்! அதிரடியாக தன் தந்தையின் முகத்தில் புகுந்து விளையாடிய சதீஷ் வீடியோ நிறைவடையும் நேரத்தில் தன் தந்தையின் முகத்தில் ரத்தம் வர வைத்து விட்டார். ஆனால் அது உண்மையில் ரத்தம் அல்ல சிவப்பு பவுடர் தான்.

ஆனால் வீடியோ பார்த்த சிலர் திடுக்கிட்டு ரத்தம் தான் என்று நினைத்துள்ளனர். தொடர்ந்து பல ட்ரெண்டிங் பதிவுகளை வெளியிடும் பிரபலங்களுக்கு நடுவில் சதீஷ் வெளியிட்ட இந்த வீடியோ சற்று வித்தியாசமாகவும் நகைச்சுவையாகவும் இருந்தது.


Click it and Unblock the Notifications











