என்ன மதிக்காதவர் எங்கப்பா... அவரே இதைப் பார்த்துட்டு அழுதுட்டாரு.. சாரா நெகிழ்ச்சி!
Recommended Video
சென்னை : ஓ மை கடவுளே படத்தை பார்த்து விட்டு என் அப்பா கட்டி பிடித்து அழுது விட்டார், இதுவே எனக்கு கிடைத்த மிக பெரிய வெற்றியாக நான் பார்கிறேன் என நடிகர் சாரா கூறினார் .
நடிகர் சாரா என்கிற சரவணன் தற்போது ஓ மை கடவுளே படத்தின் மூலம் சிறந்த நடிகர் என்ற பாராட்டை பெற்றிருக்கிறார். இவர் மீசையமுருக்கு படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக பிரபலமடைந்தவர். யூடியூப் மூலம் சினிமா வந்து அசத்திய பல கலைஞர்களில் இவரும் ஒருத்தர்.

தமிழில் மிக பழைய யூடியூப் சேனல் என்று சொல்லப்படும் டெம்பில் மங்கீஸ் சேனலில் இருந்து வந்தவர் சாரா. இந்த சேனலின் முக்கியமான நடிகர்கள் அனைவரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சாரா மாநகரம், மீசையமுருக்கு, இருட்டு அறையில் முரட்டு குத்து, நட்பே துணை, கோமாளி, ஆக்ஷ்ன், நான் சிரித்தால் மற்றும் ஓ மை கடவுளே படங்களில் நடித்து இருக்கிறார். சாரா ஓ மை கடவுளே படத்தில் நடித்ததை தவிர்த்து மற்ற அனைத்து படங்களிலுமே அனிமேட்டட் சாயல் கதாபாத்திரங்களில் தான் நடித்து வந்தார் .

ஓ மை கடவுளே படத்தின் வெற்றி விழாவில் பேசும் போது சாரா இதை பற்றி கூறினார். ஓ மை கடவுளே படம் தான் எனக்கு முதல் முறையாக முழு நடிகராய் நடிக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறது என்று. இதனால் பலரும் எனக்கு போன் செய்து வாழ்த்துகின்றனர் என சந்தோஷத்துடன் கூறினார் .
மேலும் பேசிய சாரா ஊருக்குள்ள என்னை மதிக்காத ஒரே ஆளு எங்க அப்பாதான். யாரும் படம் பார்த்து விட்டு நன்றாக இருக்கிறது என சொன்னால் எங்க அப்பா கண்டு கொள்ளவே மாட்டார். ஆனால் ஓ மை கடவுளே படத்தை பார்த்து விட்டு கட்டி பிடித்து அழுது விட்டார் என மனமகிழ்ச்சியுடன் கூறினார். மேலும் இதுவே எனக்கு கிடைத்த மிக பெரிய வெற்றியாக பார்கிறேன் என சாரா கூறினார் . மேலும் தன் மனைவியும் படத்தை பார்த்து விட்டு மனகுமுறல்களை தான் அஷ்வத் மாரிமுத்து படமாக இயற்றியிருக்கிறார் என மகிழ்ச்சியுடன் கூறியதாக சாரா விழாவில் பகிர்ந்து இருந்தார் .

சாரா ஒரு வளர்ந்து வரும் நடிகர் இவருக்கு ஓ மை கடவுளே படம் மூலம் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் சாரா அடுத்ததாக காதலிக்க யாருமில்லை , அரசியல்ல இது சாதாரணமப்பா மற்றும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது படங்களில் நடித்து வருகிறார். மேலும் சக டெம்பில் மங்கீஸ் நண்பரான விஜய் வரதராஜ் இயக்கும் பல்லு படாம பாத்துக்கோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











