400 ரூபா கேக்குக்கு 4000 ரூபாய் பில்லா..? பிள்ளைகளால் அதிர்ந்துபோன நடிகர் சூரி !

சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூரி சமீபத்தில் பிறந்த நாளை கொண்டாடினார்.

அவரது பிறந்தநாளுக்கு பல்வேறு திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்த நிலையில் சொந்த வீட்டிலேயே இவருக்கு மிகப்பெரிய அநியாயம் ஒன்று நடந்திருக்கிறது.

சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு இவரது பிள்ளைகள் கேக் வாங்கி வீட்டில் வெட்டி கொண்டாடியதையொட்டி, அந்த கேக்கிற்கு ஆன செலவையும் அதே கேக்கில் குறிப்பிட்டு சூரியை அதிர்ச்சி ஆக்கியுள்ளனர்.

பிறந்தநாளை கொண்டாடிய

பிறந்தநாளை கொண்டாடிய

தனது யதார்த்தமான நகைச்சுவையின் மூலம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த காமெடி நடிகராக இருந்து வரும் நடிகர் சூரி கடந்த 27ஆம் தேதி தனது 43வது பிறந்தநாளை கொண்டாடிய இதையொட்டி இவருக்கு திரைத் துறையைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி இருந்தனர்.

வெண்ணிலா கபடி குழு

வெண்ணிலா கபடி குழு

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான சூரி அதன்பின் நடித்த பல்வேறு திரைப்படங்களில் மாறுபட்ட நகைச்சுவை காட்சிகளில் நடித்து இப்பொழுது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மிகவும் பிரபலமானது

மிகவும் பிரபலமானது

சிவகார்த்திகேயன், அஜித், விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து திரைப்படங்களில் ரகளை செய்து வரும் சூரி, சிவகார்த்திகேயனுடன் இணையும் படங்களில் வரும் காமெடி மிகவும் பிரபலமானது.

வயிறு குலுங்க சிரிக்க

வயிறு குலுங்க சிரிக்க

மனம் கொத்தி பறவை திரைப்படத்தில் முதன்முதலாக இணைந்த இவர்கள், அதைத்தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா, நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல திரைப்படங்களில் தொடர்ந்து காமெடியில் கலக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகின்றனர்.

அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்

அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்

எப்பொழுதும் வெள்ளந்தியாக பேசக்கூடிய நடிகர் சூரிக்கு திருமணமாகி வெண்ணிலா மற்றும் சர்வன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி சூரி தனது 43வது பிறந்தநாளை கொண்டாடியதையொட்டி இவரது குழந்தைகள் இவருக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அவ்வாறு கொண்டாடப்பட்ட கேக்கின் மேல் எழுதப்பட்டிருந்ததை பார்த்த சூரி அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

செலவு 4,000

செலவு 4,000

வெண்ணிலா மற்றும் சர்வன் அப்பாவிற்கு கேக் வாங்கிய கையோடு அதில் கேக்கிற்கு ஆன செலவுகளாக, கேக் செலவு 1500, பெட்ரோல் செலவு 500, டெக்ரேசன் செலவு 2000 என ஆக மொத்தம் அந்த கேக்கிற்கு ஆன செலவு 4,000 ரூபாய் என எழுதிவிட்டு அதன் கீழே, "மொத காச எடுத்து வெச்சிட்டு கேக்க வெட்டு" என்று அந்த கேக்கின் மேல் எழுதி இருந்தனர்.

நாபெத்த பிள்ளைங்க

நாபெத்த பிள்ளைங்க

இவ்வாறு வேடிக்கையாக தன்னுடைய பிள்ளைகள் எழுதிருந்த இந்த அழகான கேக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் சூரி பதிவிட்டு "400ரூவா கேக்க கொடுத்துபுட்டு 4000ருவாய புடிங்கிருச்சுங்க நாபெத்த பிள்ளைங்க. இருந்தாலும் இந்த கேக்கிற்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம். தேங்க்யூ கட்டிபெத்தார்களா". எனக் குறிப்பிட்டு இருந்த அந்த பிறந்தநாள் கேக் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X