எல்லாரும் வேற எதிர்பார்த்தாங்க.. ஆனா சன் பிக்சர்ஸ் கொடுத்த ’தலைவர் 168’ அப்டேட் என்ன தெரியுமா?
Recommended Video
சென்னை: தர்பார் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ள 'தலைவர் 168' படத்தின் மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.
அனிருத் இசையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குரலில் நேற்று வெளியான தர்பார் 'சும்மா கிழி' பாடல் தென்னிந்தியாவில் புதிய சாதனை படைத்துள்ள நிலையில், உடனடியாக அடுத்த வெறித்தனத்தை ரஜினி ரசிகர்களுக்கு சன் பிக்சர்ஸ் கொடுத்துள்ளது.
தலைவர் 168 படத்தின் நாயகி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், நடிகர் சூரி படத்தில் இணைந்துள்ள அப்டேட்டை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

இருவரும் இல்லையா?
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகவுள்ள ‘தலைவர் 168' படத்தில் ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் நாயகிகளாக நடிப்பார்கள் என்ற தகவல் வெளியானது. அதன் பிறகு, அசுரன் பட நாயகி மஞ்சு வாரியர் ஜோதிகாவுக்கு பதிலாக நடிப்பார் என்ற வதந்தியும் வைரலானது. ஆனால், தற்போது இருவரும் இல்லை என்ற புதிய தகவல் கிளம்பியுள்ளது.
குஷ்புவா? மீனாவா?
ஜோதிகா, மஞ்சு வாரியர் இருவரும் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், ‘தலைவர் 168'ல் அப்பா ரஜினிக்கு ஜோடியாக நடிகை மீனா மற்றும் குஷ்புவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், நடிகை குஷ்பு தான் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் கசிந்து வருகிறது. சன் பிக்சர்ஸின் அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை காத்திருப்போம்.
சூரிக்கு சுக்கிர திசை
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இறுதியாக வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தின் இசையமைப்பாளர் இமான் ‘தலைவர் 168' படத்தில் இணைந்துள்ள நிலையில், அடுத்ததாக அதே படத்தில் நடித்த சூரிக்கு சுக்கிர திசை அடித்தது போல, சூப்பர்ஸ்டார் படத்தில் நடிக்கும் யோகம் கிடைத்துள்ளது.
வேதாளம் தந்த வாய்ப்பு
சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான வேதாளம் படத்தில் தல அஜித்துடன் சூரி இணைந்து கலக்கல் காமெடி செய்திருப்பார். தற்போது ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் சிறுத்தை சிவா மீண்டும் சூரிக்கு இந்த அரிய வாய்ப்பை கொடுத்துள்ளார்.
வடிவேலு இல்லையா?
சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிக்கவுள்ள 'தலைவர் 168' படம் வரும் டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் வடிவேலு காமெடியனாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூரி இணைந்துள்ளது, வடிவேலு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











