கொரோனா வைரஸ் பாதிப்பு.. சிகிச்சைப் பெற்றுவந்த காமெடி நடிகர் திடீர் உயிரிழப்பு.. திரையுலகம் சோகம்!

By

ஐதராபாத்: கொரோனா பாதிப்பு காரணமாக பிரபல காமெடி நடிகர் உயிரிழந்துள்ளது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த உயிர்கொல்லி வைரஸை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நாளுக்கு நாள்

நாளுக்கு நாள்

இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 லட்சத்து 46 ஆயிரத்து 11 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 90 ஆயிரத்து 20 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சினிமா பிரபலங்கள்

சினிமா பிரபலங்கள்

இந்த கொரோனா பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக், விஷால், ராஜமவுலி உள்பட பலருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறினர். இந்த வைரஸ் காரணமாக பல சினிமா பிரபலங்கள் பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன், குணசித்திர நடிகர் புளோரன்ட் பெரேரா கொரோனாவால் உயிரிழந்தார்.

வேணுகோபால் கோசுரி

வேணுகோபால் கோசுரி

இந்நிலையில் பிரபல தெலுங்கு காமெடி நடிகர் வேணுகோபால் கோசுரி கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்குப் பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டது.

மருத்துவமனை

மருத்துவமனை

இதையடுத்து கச்சிபவுலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து ஏராளமான திரையுலகினரும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பில்லா ஜமீந்தார்

பில்லா ஜமீந்தார்

ராஜமவுலி இயக்கிய பல படங்களில் இவர் நடித்துள்ளார். மரியாத ராமனா, சலோ, பில்லா ஜமீந்தார், அமி துமி உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பல நாடகங்களிலும் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். வேணுகோபாலின் மறைவு தெலுங்கு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X