இதெல்லாம் செஞ்சா கொரோனா வராதாம்.. நடிகர் விவேக் ஏற்படுத்தும் விழிப்புணர்வு!

சென்னை: சமீப காலமாக சமூக வலைதளங்களில் பயங்கரமாக ஆக்டிவாக இருக்கிறார் நடிகர் விவேக்.

Recommended Video

Cinema Square: இன்றைய சினிமா செய்திகள்

சமூக அக்கறை நோக்கில் பல பதிவுகளையும் பதிவிட்டு வருகிறார். சில பதிவுகள் சர்ச்சையையும் கிளப்பி விட தவறுவதில்லை.

இந்நிலையில், தற்போது, தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பதிவு ஒன்றை நடிகர் விவேக் போட்டுள்ளார்.

சாதாரணம் இல்ல

கொலைகார கொரோனா

கொலைகார கொரோனா

சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா என உலகளவில் நூற்றுக் கணக்கான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் ஹான்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரிட்டா வில்சனுக்கும் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டு, தற்போது, தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர். இதுவரை 4000 பேரை இந்த நோய் பலி வாங்கி உள்ளது.

தியேட்டர்கள் மூடல்

தியேட்டர்கள் மூடல்

இந்தியாவில் கேரளா மாநிலம் தான் கொரோனா தாக்கத்திற்கு அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர், தியேட்டர்களை மூடும்படி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தமிழ் நாட்டிலும், வரும் மார்ச் 27ம் தேதி புதிய படங்களை ரிலீஸ் செய்யக் கூடாது என்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

விவேக் விழிப்புணர்வு

விவேக் விழிப்புணர்வு

"அடிக்கடி சோப் அல்லது சுத்திகரிப்பானால் கை கழுவுதல், கூட்டம் உள்ள இடத்தில் முகமூடி அணிதல், நம் கைகள் படும் இடம் சுத்தமாக இருக்கிறதா என உறுதி செய்தல், இருமல் தும்மல் இருப்பவரோடு இடைவெளி விட்டு இருத்தல், நிலவேம்பு, ஆரஞ்சு, நெல்லி உண்ணல். #கொரோனா தவிர்ப்போம்" என கொரோனா வராமல் தடுக்க சில வழிமுறைகளை விவேக் கூறியுள்ளார்.

குவிகிறது பாராட்டு

குவிகிறது பாராட்டு

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, என்ன என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெளிவாக தனது ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் ட்விட்டர் வாயிலாக நடிகர் விவேக் ஏற்படுத்தியுள்ள இந்த விழிப்புணர்வை பார்த்த ரசிகர்கள், அவரை பாராட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் தனது தலையை தூக்கியுள்ள கொரோனா வசம் சிக்காமல் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X