என்னது.. நடிகர் யோகி பாபு ஒரு கிரிக்கெட் பிளேயரா..அட இது தெரியாம போச்சே!

சென்னை : தமிழ் காமெடி நடிகர்களில் இப்போது உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் யோகிபாபு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஜடா என்ற படத்தில் இவர் ஃபுட்பால் பிளேயர் ஆக நடித்திருப்பார்.

மேலும் இவர் பல மேடைகளில் தான் ஒரு ஃபுட்பால் பிளேயர் என்பதை சுட்டிக் காட்டியுள்ளார். இந்நிலையில் இவர் கிரிக்கெட் விளையாட்டிலும் சிறந்தவர் என்பதை நிரூபிக்கும் வகையில் தற்போது ஒரு புகைப்படம் இணையத்தில் சுற்றி வருகிறது.

துணை நடிகராக

துணை நடிகராக

தனது சொந்த உழைப்பால் படிப்படியாக முன்னேறி தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. தொலைக்காட்சிகளில் துணை நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கிய யோகிபாபு இப்போது தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

திருப்புமுனையாக

திருப்புமுனையாக

இவர் சிறு சிறு கதாபாத்திரங்களில் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் யாமிருக்க பயமேன் மற்றும் மான் கராத்தே போன்ற படங்கள் இவரின் திரைத்துறை வாழ்க்கைக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

ஹீரோவாகவும்

ஹீரோவாகவும்

வித்தியாசமான பரட்டைத் தலை பருத்த உடல் போன்ற இயற்கையாகவே தனக்கு அமைந்த உடல் அமைப்பை வைத்து காமெடிகளில் கலக்கி வரும் யோகி பாபு காமெடி நடிகராக மட்டுமல்லாமல் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

மிகப்பெரிய

மிகப்பெரிய

இவர் காமெடியனாக நடித்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பு பெற்றதோ அதே போன்று இவர் ஹீரோவாக நடித்த கூர்க்கா, தர்மபிரபு போன்ற படங்களும் இவரின் காமெடிக்காகவே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

பள்ளிப் புகைப்படம்

பள்ளிப் புகைப்படம்

இந்நிலையில் இவர் சமீபத்தில் நடித்த பிகில், தர்பார் போன்ற படங்களில் இவரின் காமெடி மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த வேளையில் தற்பொழுது இவரின் பள்ளிப் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.

பலருக்கு தெரியாது

பலருக்கு தெரியாது

நம் அனைவருக்கும் தெரிந்த யோகி பாபு நகைச்சுவை நடிகராகவும், ஹீரோவாகவும் பல படங்களில் பார்த்து வந்துள்ளோம். அதேபோன்று இவர் ஒரு நல்ல கால்பந்தாட்ட வீரர் என்பதும் பலருக்கு தெரியும், ஆனால் இவர் ஒரு கிரிக்கெட் பிளேயர் என்பது நம்மில் பலருக்கு தெரியாது.

கையில் சான்றிதழ்

கையில் சான்றிதழ்

தேசிய மற்றும் மாநில கிரிக்கெட் சாம்பியன் என்ன பெயரிடப்பட்டுள்ள ஒரு புகைப்படத்தின் கீழ் வெற்றி பெற்ற கிரிக்கெட் அணி ஒன்று மகிழ்ச்சியுடன் போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. அதில் யோகிபாபு கையில் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வைத்தவாறு தனது கிரிக்கெட் அணியுடன் போஸ் கொடுத்திருக்கும் ஒரு போட்டோ ஒன்று தற்போது இணையதளத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.

ஆச்சரியத்தில்

ஆச்சரியத்தில்

நாம் அனைவரும் யோகிபாபு ஒரு ஃபுட்பால் பிளேயர் என நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இவர் பள்ளிப்பருவத்தில் கிரிக்கெட் விளையாட்டிலும் மிகச் சிறந்து விளங்கியவர் என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X