தலைவர் ராக்ஸ்... அண்ணாத்த படம் குறித்து யோகிபாபு கமெண்ட்

சென்னை : சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது அண்ணாத்த படம்.

படம் குறித்து ரசிகர்களும் சக நடிகர்களும் சிறப்பான கமெண்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காமெடி நடிகர் யோகி பாபுவும் அண்ணாத்த படம் குறித்த தனது கருத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அண்ணாத்த படம்

அண்ணாத்த படம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி தீபாவளியையொட்டி ரிலீசாகியுள்ளது அண்ணாத்த படம். வெளியான திரையரங்குகளில் எல்லாம் அரங்கு கொள்ளாத ரசிகர்களுடன் இந்தப் படம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் இந்த விடுமுறை தினத்தை அண்ணாத்த படத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

சிறப்பான வசூல்

சிறப்பான வசூல்

முதல் நாளிலேயே சிறப்பான வசூலையும் அண்ணாத்த படம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புக் மை ஷோவில் இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து ரசிகர்கள் திரையரங்குகளில் குடும்பங்களுடன் வந்து படத்தை பார்த்து மகிழ்கின்றனர்.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

படம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. முந்தைய படங்களின் சாயல் படத்தில் காணப்படுவதாகவும் முந்தைய அண்ணன் -தங்கை படங்களை நினைவு படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆயினும் அண்ணன் -தங்கை பாசத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சிறப்பான கமெண்ட்டுகள்

சிறப்பான கமெண்ட்டுகள்

படம் குறித்து ரசிகர்கள் மற்றும் சக நடிகர்கள் சிறப்பான கமெண்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தலைவர் சிறப்பான வகையில் தன்னுடைய நடிப்பை வழங்கியுள்ளதாக கூறி வருகின்றனர். கமர்ஷியலாக இந்தப் படத்தை டைரக்டர் சிவா உருவாக்கியுள்ளார்.

யோகி பாபு பாராட்டு

யோகி பாபு பாராட்டு

இந்நிலையில் காமெடி நடிகர் யோகி பாபுவும் அண்ணாத்த படம் குறித்த தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். படம் முழுமையான குடும்ப என்டர்டெயின்மெண்ட்டாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் படம் சென்டிமெண்ட்டாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தலைவர் ராக்ஸ்

தலைவர் ராக்ஸ்

தலைவர் ராக்ஸ் என்றும் தெரிவித்துள்ள யோகி பாபு, அண்ணாத்த படத்தின் போஸ்டர் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். படத்தில் சூரி, சதீஷ் உள்ளிட்ட காமெடி பட்டாளங்கள் உள்ள நிலையில், யோகி பாபு இடம்பெறவில்லை. இந்நிலையில் படம் குறித்து அவர் தனது சிறப்பான கமெண்ட்டை அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X