கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டேன்... நீங்களும் போட்டுக்கங்க... யோகி பாபு அட்வைஸ்!
சென்னை : பிரபல காமெடி நடிகர் யோகி பாபு கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக் கொண்டுள்ளார்.
Recommended Video
மேலும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதன் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், மற்றவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
அவர் தற்போது அஜித்தின் வலிமை மற்றும் விஜய்யின் தளபதி 65 உள்ளிட்ட ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

குடும்பத்தினருடன் யோகி பாபு
பிரபல காமெடி நடிகர் யோகி பாபு வலிமை, தளபதி 65 உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக அஜித்தின் வீரம், வேதாளம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களிலும் இவர் நடித்துள்ளார். தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டில் குடும்பத்தினருடன் பொழுதை கழித்து வருகிறார்.

சிறப்பான விமர்சனங்கள்
சமீபத்தில் வெளியான இவரது மண்டேலா படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. தொடர்ந்து முன்னணி ஹீரோக்கள் பலருடனும் இவர் நடித்து வருகிறார். அவ்வப்போது இத்தகைய தனி ஹீரோ கேரக்டர்களிலும் நடித்து வருகிறார். தற்போதைய முன்னணி காமெடியனாக வலம் வருகிறார் யோகி பாபு.

தடுப்பூசி போட்ட யோகி பாபு
இந்நிலையில் இவர் கொரோனா தடுப்பூசியை தனியார் மருத்துவமனையில் போட்டுள்ளார். மேலும் இதுகுறித்த புகைப்படத்தையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் மற்றவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் வலியுறுத்தியுள்ளார். பாதுகாப்பாக வீட்டில் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

நெற்றி முழுவதும் திருநீறு
தடுப்பூசி போட்டுக் கொள்ள சாதாரண டி-சர்ட்டில் வந்தாலும் நெற்றி முழுவதும் திருநீற்றை பூசி வந்துள்ளார் யோகிபாபு. தொடர்ந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முருகர் சம்பந்தமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதன்மூலம் அவர் முருகர் பக்தர் என்பது தெரிகிறது. மேலும் தன்னுடைய டிபியிலும் முருகர் படங்களையே பதிவிட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











