நகைச்சுவை மன்னன் யோகிபாபுக்கு இன்று பிறந்தநாள்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!
சென்னை: தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் தமிழ் மக்கள் அனைவரையும் தொடர்ந்து சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகர் யோகிபாபு தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த யோகிபாபு கோலமாவு கோகிலா, கூர்கா, தர்மபிரபு உள்ளிட்ட பல படங்களில் லீட் ரோலிலும் நடித்துள்ளார்.
ஜூலை 22 ஆம் தேதியான இன்று இவர் தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை சொல்லியும் சமூகவலைதளங்களில் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டாடியும் வருகின்றனர்.

யோகி திரைப்படத்தில்
ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த யோகி பாபு பலராலும் கவனிக்கப்படாத நிலையில், இயக்குனர் அமீர் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமான யோகி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமாகி அனைவருக்கும் பரிச்சயமானார்.

சரியான அங்கீகாரம்
அதைத்தொடர்ந்து தில்லாலங்கடி, பையா, வேலாயுதம் என பல படங்களில் சிறிய காமெடி கதாபாத்திரங்களிலும் மற்றும் ரவுடி கூட்டத்தில் ஒருவராகவும் வந்து அவ்வப்போது தலையை நீட்டி சென்றார். இவ்வாறு பல படங்களில் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கான சரியான அங்கீகாரம் கிடைக்காத நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே திரைப்படத்தில் இவரின் காமெடி காட்சிகள் மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டு மக்கள் பலராலும் இவர் வரும் காமெடி காட்சிகள் ரசிக்கப்பட்டு மிகப் பிரபலமானார்.

தன்னைத்தானே கலாய்த்துக் கொண்டு
ஒவ்வொரு நிலையிலும் தனக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பயணித்துக் கொண்டிருந்த யோகிபாபு தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். யார் மனதையும் புண்படுத்தாத நகைச்சுவை மூலம் தன்னைத்தானே கலாய்த்துக் கொண்டு பலரையும் சிரிக்கவைக்கும் இவரின் அசாத்தியமான நகைச்சுவை திறமை பல்வேறு மக்களை கவர்ந்து வருகிறது.

முன்னணி நடிகர்களுடன் இணைந்து
மான் கராத்தே திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமான யோகிபாபு அதைத் தொடர்ந்து யாமிருக்க பயமே, காக்கிச்சட்டை உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து ஸ்கோர் செய்து தற்போது தமிழில் முன்னணி நடிகர்களாக உள்ள விஜய், அஜித், ரஜினி என பல நடிகர்களுடன் இணைந்து காமெடியில் மாஸ் காட்டி வருகிறார்.

லீட் ரோலில்
இவ்வாறு தன்னுடைய நகைச்சுவை உணர்வு மூலம் இன்று வரை தொடர்ந்து அனைவரையும் ரசிக்க வைத்துக் கொண்டு வந்த யோகி பாபு தற்பொழுது பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இவர் நடித்த கோலமாவு கோகிலா மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் அதைத் தொடர்ந்து கூர்கா, தர்மபிரபு உள்ளிட்ட பல படங்களில் லீட் ரோலில் நடித்து அசத்தி வருகிறார்.
Recommended Video

பிறந்தநாள்
இவ்வாறு காமெடியில் அனைவரையும் ரசிக்க வைத்து வரும் யோகி பாபு ஜூலை 22 ஆம் தேதியான இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை சொல்வதோடு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை பகிர்ந்தும் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











