»   »  காஷ்மோரா விவேக்… கொடி கருணாஸ்… அப்பாவாகும் காமெடியன்கள்!

காஷ்மோரா விவேக்… கொடி கருணாஸ்… அப்பாவாகும் காமெடியன்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் ஹீரோ மட்டும் பல ஆண்டுகளுக்கு ஹீரோவாகவே நடிப்பார். மற்றவர்கள் எல்லோரும் கால மாற்றம் ஏற்பட்டால் அவர்களுக்கே அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி கேரக்டர் வரைக்கும் போவார்கள். அப்படி இது நண்பர்களாக நடித்துக்கொண்டிருந்த காமெடியன்கள் அப்பாவாகும் சீஸன்.

கார்த்தி, நயன் தாரா, ஸ்ரீதிவ்யா நடிக்கும் காஷ்மோரா படத்தில் விவேக் நடிக்கிறார். முழுக்க காமெடி படமான காஷ்மோராவில் விவேக் நடிப்பது கார்த்திக்கு அப்பாவாக. கார்த்தி இதற்கு முன் நடித்த தோழா படத்திலும் விவேக் நடித்திருந்தார். ஆனால் மாமாவாக காமெடி ரோலில் நடித்தார்.


Comedians turn Character artists

தனுஷின் ஆரம்பகால படங்களில் எல்லாம் தவறாமல் இடம்பிடித்தவர் கருணாஸ். தனுஷுக்கு நண்பனாக நடித்தவர் இப்போது கொடி படத்தில் தனுஷுக்கு அப்பாவாக நடிக்கிறாராம். தனுஷுடன் கடைசியாக உத்தமபுத்திரன் படத்தில் நடித்திருந்தார் கருணாஸ்.


Comedians turn Character artists

இப்படி ஹீரோக்கள் தங்களை இளமையாகக் காட்ட காமெடியன்களை எல்லாம் அப்பா, தாத்தாவாக்காமல் ஓயமாட்டார்கள் போல...!

English summary
Senior comedians like Vivek, Karunaas are turning as Character artists in forthcoming movies.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil