ஜன பாபு கேசரி பார்க்க ரெடியா இருங்க.. பகவந்த் கேசரியே ரீமேக் படம் தான்.. கலாய்க்கும் பிரபலம்

சென்னை: விஜய் நடிப்பில் வரும் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் ஜன நாயகன். இந்த படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை ஹெச். வினோத் இயக்கி உள்ளார். இது நடிகர் விஜயின் கடைசி படம். படத்தில் பூஜா ஹெக்டே, பிரியாமணி, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படம் வெளியாக இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால், படத்தின் ரிலீஸ் வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நகைச்சுவை நடிகரும் ரஜினியின் தீவிர ரசிகருமான ஆதவன் ஜன நாயகன் படம் குறித்து பேசியுள்ள தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜன நாயகன் படம் கடந்த 2023 ஆம் ஆண்டு தெலுங்கில் பாலய்யா நடித்து வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதுவும் ஜன நாயகன் படத்தின் டிரைலர் வெளியாகி அதை 100 சதவீதம் உறுதி செய்துவிட்டது. இப்படி இருக்கும்போது, ஜன நாயகன் படத்தை ஜன கேசரி என்று சிலர் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Comedy Actor Aadhavan Trolls Jana Nayagan Remake Of Bhagavanth Kesari its Already Remake From Tamil Movie Babu
Photo Credit:

இந்நிலையில் நகைச்சுவை நடிகர் ஆதவன் ஜன நாயகன் படம் குறித்து பேசிய உள்ள வீடியோவில் அவர் தெரிவித்துள்ள தகவல்கள் பலருக்கும் ஷாக் கொடுக்கிறது. அதாவது ஜன நாயகன் படம் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் பகவந்த் கேசரி படமே ஒரு ரீமேக் படம் தான் என்பது, பல பேருக்குத் தெரியாது.

சினிமா அதிகம் பார்ப்பேன் என்பதால், சில கதைகள் எங்கிருந்து எடுத்தார்கள் என்பது எனக்குத் தெரிந்து விடும். பகவந்த் கேசரி படத்தின் கதையைப் பொறுத்தவரையில், ஒரு வயதானவர், ஒரு குழந்தையின் பெற்றோர்கள் இறந்த பின்னர், குழந்தையை பார்த்துக் கொள்கிறார். அந்த குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்று, திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார். நல்லபடியாக படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

பாபு: இந்த கதைதான், மதிப்பிற்குரிய,டாக்டர் செவாலியர் சிவாஜி கணேசன் நடித்த பாபு என்ற படத்தின் கதை. இந்த படத்தை நான் கடந்த வாரம் தான் எதேர்ச்சியாக பார்த்தேன். காட்சிக்கு காட்சி அப்படியே வருகிறது. பாபு படத்தில் வெண்ணிற ஆடை நிர்மலா தான் சிவாஜியின் மகளாக வருவார். அவர் கல்லூரியில் படிக்கும் போது சிவக்குமாரை காதலிப்பார். ஒரு காட்சியில் நான் முக்கியமா? இல்லை உனக்கு உன் மாமா தான் முக்கியமா? என்று கேட்பார். அதற்கு எனக்கு என் மாமா தான் முக்கியம் என்று கூறிவிட்டுச் சென்றுவிடுவார்.

Comedy Actor Aadhavan Trolls Jana Nayagan Remake Of Bhagavanth Kesari its Already Remake From Tamil Movie Babu
Photo Credit:

ஜன பாபு கேசரி: இது போன்ற காட்சிகள் எல்லாமே பாபு படத்தில் இருப்பது போலவே, பகவந்த் கேசரி படத்தில் உள்ளது. பகவந்த் கேசரியில் இருப்பது போலவே ஜன நாயகன் படத்திலும் இருக்கும். எனவே, ஜன நாயகன் வெறுமனே பகவந்த் கேசரி மட்டும் கிடையாது. பாபு தான் பகவந்த் கேசரி, பகவந்த் கேசரி தான் ஜன நாயகன், எனவே இது ஜன பாபு கேசரி" என்று பேசி வீடியோ பதிவிட்டுள்ளார்.

ம்லையாள ரீமேக்: இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதே நேரத்தில் இந்த வீடியோவின் கமெண்ட் செக்‌ஷனில் இணையவாசி ஒருவர், " பாபு 1971 ஆம் ஆண்டு ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படமாகும். சிவாஜி கணேசன் , சவுகார் ஜானகி மற்றும் வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோர் நடித்த இந்த படம், மலையாள திரைப்படமான 'ஓடையில் நின்னு'வின் மறுஆக்கம் ஆகும். இது பி. கேசவதேவின் 'ஓடையில் நின்னு' நாவலை அடிப்படையாகக் கொண்டது" என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X