அம்மாவுக்கு ஒரு புடவை கூட வாங்கி தரல..மதுக்கு அடிமையாக இருந்தேன்.. பாவா லட்சுமணனின் கண்ணீர் பேட்டி!

சென்னை: காமெடி நடிகர் பாவா லட்சுமணன் தனது அம்மாவை நினைத்து கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார்.

நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து காமெடியில் கலக்கியவர் பாவா லட்சுமணன்.

comedy actor bava lakshmanan emotional interview

இவர் மாயி படத்தில் வடிவேலு பெண் பார்க்க செல்லும் காட்சியில் பெண்ணின் தந்தையாக, வா மா மின்னலு என்ற வசனத்தின் மூலம் பிரபலமானார்.

பாவா லட்சுமணன்: வடிவேலுவுடன் பலத்திரைப்படங்களில் நடித்து வந்த பாவா லட்சுமணன் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். அப்போது விஜய் டிவி கலக்கப்போவது யாரு பாலா, ஓடி சென்று அவருக்கு உதவி செய்தார். இதைத்தொடர்ந்து, பலர் நடிகர்கள் அவருக்கு உதவி செய்தனர். தற்போது அவரது உடல்நிலை ஓரளவிற்கு குணமடைந்துள்ளது.

அண்ணனுடன் சண்டை: இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த, பாவா லட்சுமணன் என்னுடன் உடன்பிறந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், அதில் ஒரு சிலருடன் தான் பேசிக்கொண்டு இருக்கிறேன். நான் பிசியாக படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது, அண்ணனுக்கும் எனக்கும் பிரச்சனை ஆகிவிட்டதால், அவருடன் நான் பேசுவதில்லை. நான் போன் செய்தாலும் அவர்கள் கட் பண்ணி விடுகிறார்கள்.

மது பழக்கம்: படவாய்ப்பு சரியாக இல்லாததால், மாமா மகனின் உதவியுடன் மொட்டை மாடியில் ஒரு வீட்டில் தங்கி வருகிறேன். எனக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், பல வாய்ப்புகளை நான் தவறவிட்டு இருக்கிறேன். அதன்பின் முத்துகாளை, தாமு இருவரும் குடிக்காதே என்று எனக்கு அறிவுரை கூறினார்கள். இதன்பிறகு அந்த பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.

கண்ணீர் பேட்டி: திருமணம் ஆகவில்லை என்று நான் வருத்தப்பட்டது இல்லை. ஆனால், இப்போது அம்மா, அப்பா இல்லை என்று வருத்தப்படுகிறேன். நான் இதுவரை அம்மாவுக்கு ஒரு புடவைக்கூட வாங்கி கொடுத்தது இல்லை, நான் சம்பாதித்த போது அவங்க இல்லை என்று பாவா லட்சுமணன் கண்ணீருடன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X