சாப்பாடு தட்டை தூக்கி வீசினார்.. மோசமாக நடந்து கொண்ட வடிவேலு.. பெஞ்சமின் பேட்டி!

சென்னை: வைகைப்புயல் வடிவேலுவை பற்றி அவருடன் சேர்ந்து நடித்த பலர் நெகட்டிவான விஷயங்களை கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் நகைச்சுவை நடிகர் பெஞ்சமின், அளித்துள்ள பேட்டியில், வடிவேலுவுடன் சேர்ந்து நடித்த போது படப்பிடிப்பில் என்ன அவர் சாப்பிடக்கூடாது என்றார், தட்டை தூக்கி வீசினார் என வேதனையை கூறியுள்ளார்.

மேடை நாடகக் கலைஞரான பெஞ்சமின் இயக்குநர் சேரன் தான்நடிக்க வைத்தார். இயக்குநர் சேரனின் வெற்றிக்கொடி கட்டு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். அந்த படத்தில் பெஞ்சமின் வடிவேலுவுக்கு மச்சானாக நடித்திருப்பார். துபாயில் இருந்து வந்த வடிவேலு பெஞ்சமினிடம் வாயை கொடுத்து மாட்டிக்கொள்வார். அப்போது, பெஞ்சமின் கெட்ட வார்த்தையால் விளாசி தள்ளுவார் .அந்த படத்தில் அந்தக் காட்சி அனைவரும் ரசிக்கும்படி இருந்தது. இதைத்தொடர்ந்து திருப்பாச்சி, வசூல் ராஜா MBBS போன்ற படத்தில் நடித்துள்ளார்.

Benjamin vadivelu Interview

அண்மையில் பெஞ்சமின் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில், வெற்றிக்கொடி கட்டு படத்தில் நடிக்க காத்திருந்தேன். சூட்டிங்குக்கு வந்த வடிவேலு, ஒழுங்காக நடிப்பியானு கேட்டார், நான் பாலச்சந்தர் சார் சிஷ்யன். அதெல்லாம் நல்லா நடிப்பேன் என்று சொன்னேன் அவ்வளவு தான், வடிவேலு சார் என்னை ரவுண்டு கட்டிட்டார். அதுமட்டுமில்லாமல், வடிவேலுவை நான் திட்டும் காட்சியின் போது, என்னால் நடிக்கவே முடியவில்லை. அந்த அளவிற்கு டார்ச்சர் செய்தார். அதுக்கு பிறகு என்னை திட்டுற அளவிற்கு நீ பெரிய ஆளா, எப்படி நீ ஊருக்கு போகிறேனு பார்க்கிறேன் என்று ஆவேசமாகச் சொன்னார். அதுமட்டுமில்லாமல், அந்த காட்சியை நீக்கி விடுங்கள் என்று வடிவேலு பிடிவாதமாகச் சொன்னார்.

அதுமட்டுமில்ல, நான் வளராத காலத்தில் படப்பிடிப்பு ஒன்றில் சாப்பிடுவதற்காக தட்டை எடுத்துசாப்பிட போனேன். அப்போது, அங்கு வந்த ஒருவர், தட்டை பிடுங்கி வீசி எறிந்தார். நானும் இந்த படத்தில் நடித்திருக்கிறேன் சார், அதனால் சாப்பிட வந்தேன் என்று சொன்னேன். நடிச்சிட்டா சாப்பிடுவியா. இன்னைக்கு 20 பேருக்கு தான் சாப்பாடு சொல்லி இருக்கு, நீ வந்து சாப்பிட்டால் என்ன அர்த்தம் என்று தட்டை சாப்பாட்டோடு எட்டி உதைத்தார். அப்போது தான் நான் ரொம்ப வருத்தப்பட்டேன், இந்த சாப்பாட்ட சாப்பிடறதுக்கு கூட அருகதை இல்லையா, எல்லாரும் கஷ்டப்படுறது வயித்துக்கு, தானே அந்த சாப்பாட்டை சாப்பிடறதுல என்ன ஆகிவிடப்போகிறது. அந்த விஷயத்தை என் வாழ்க்கையில் நான் என்னைக்கும் மறக்கவே மாட்டேன் என்று நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X