திருப்பாச்சி பட நடிகர் பெஞ்சமினுக்கு திடீர் உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் விஜய் நடித்த திருப்பாச்சி, படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்தவர் பெஞ்சமின். மேடை நாடக கலைஞரான இவரை வெற்றிக்கொடிக்கட்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார் இயக்குநர் சேரன்.

40க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் பெஞ்சமின் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என சமூக வலைதளங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். நடிகர் பெஞ்சமின் குடும்பத்துடன் சேலத்தில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











