twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாங்களும் ஆவோம்ல.. ஹீரோவான பிரபல காமெடி நடிகர் போண்டா மணி.. போதை மனிதனைப் பற்றிய கதையாம்!

    By
    |

    சென்னை: பிரபல காமெடி நடிகர் போண்டா மணி ஹீரோவாக நடிக்கிறார்.

    காமெடி நடிகர்கள் ஒரு கட்டத்தில் ஹீரோக்களாக நடிப்பது தமிழ் சினிமாவில் சகஜம்.முந்நாள், இந்நாள் காமெடி நடிகர்கள் பலர் இதற்கு உதாரணமாக இருக்கிறார்கள்.

    கவுண்டமணி, பணம் பத்தும் செய்யும் உள்பட சில படங்களின் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

    திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.. சூப்பரா ஜெயிச்ச சிஎஸ்கே.. தல தோனியை கொண்டாடும் பிரபலங்கள்!திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.. சூப்பரா ஜெயிச்ச சிஎஸ்கே.. தல தோனியை கொண்டாடும் பிரபலங்கள்!

    இம்சை அரசன்

    இம்சை அரசன்

    வைகைப் புயல் வடிவேலு, இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், தெனாலிராமன், எலி உள்பட சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இதில் சில படங்கள் ஹிட்டாயின. நடிகர் விவேக், நான் தான் பாலா, வெள்ளைப் பூக்கள், பாலகாட்டு மாதவன் உள்பட சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

    காமெடி கேரக்டர்

    காமெடி கேரக்டர்

    இந்நிலையில் பல படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள போண்டா மணி, இப்போது ஹீரோவாக அறிமுகமாகிறார். இவர், சுமார் 270 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆரம்பத்தில், கவுண்டமணி, செந்தில் படங்களில் அவர்களோடு சேர்ந்து காமெடி செய்தவர், போண்டா மணி.

    வடிவேலு, விவேக்

    வடிவேலு, விவேக்

    பிறகு நடிகர்கள் வடிவேலு, விவேக், சந்தானம், சூரி, யோகி பாபு ஆகிய காமெடி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ளார். வடிவேலுவுடன், இவர் நடித்துள்ள பல காமெடி காட்சிகள் இன்று வரை பேசப்பட்டு வருகின்றன. 'அண்ணே அடிச்சும் கேப்பாய்ங்க, அப்பவும் சொல்லிடாதீங்க' என்பது உள்பட வடிவேலுவுடன் இவர் நடித்த பல காமெடி காட்சிகள் உயிர்ப்புடன் உள்ளன.

    ஜோடியாக சர்மிலி

    ஜோடியாக சர்மிலி

    இவர் கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கு, சின்ன பண்ணை பெரிய பண்ணை என்று டைட்டில் வைத்துள்ளனர். இவருக்கு ஜோடியாக சர்மிலி நடிக்கிறார். படத்தை பகவதி பாலா இயக்குகிறார். இதுபற்றி போண்டா மணி கூறும்போது, 'சினிமாவுக்கு வந்து 35 வருடங்கள் ஆகிவிட்டன.

    கே.பாக்யராஜ்

    கே.பாக்யராஜ்

    இலங்கையில் இருந்து வந்து எடப்பாடி அகதிகள் முகாமில் இருந்த என்னை நடிகர் ஆக்கியவர், டைரக்டர் கே.பாக்யராஜ். பவுனு பவுனுதான் படத்தில் அறிமுகமானேன். இப்போது சின்ன பண்ணை பெரிய பண்ணை படத்தில் கதை நாயகனாக நடிக்கிறேன். இது போதைக்கு அடிமையான ஒரு மனிதனை பற்றிய கதை. இந்த படம் நிச்சயம் பேசப்படும் விதமாக இருக்கும் என்கிறார் போண்டா மணி.

    English summary
    The famous Comedy actor Bonda Mani becomes hero in the film, Periya pannai chinna pannai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X