Bonda Mani On Soori - சூரிக்கு நன்றியே இல்லை; தினமும் 200 ரூபாய் கொடுப்பேன்.. வெளுத்து வாங்கும் காமெடி நடிகர்
சென்னை: Bonda Mani On Soori (சூரியை விமர்சிக்கும் போண்டாமணி) என் வீட்டில் சாப்பிட்ட நன்றியே சூரிக்கு இல்லை என காமெடி நடிகர் போண்டா மணி காட்டமாக தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக போராடியவர் சூரி. மதுரையை பூர்வீகமாகக் கொண்ட அவர் சினிமா மீது இருக்கும் ஆசையால் சென்னைக்கு வந்தவர். வந்ததும் அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் செட் அசிஸ்டெண்ட், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என சினிமாவில் கிடைக்கும் அத்தனை வேலைகளையும் செய்தார்.

காமெடி நடிகராக ஜொலித்த சூரி
ஒருவழியாக சுசிந்தீரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தில் படத்தின் பெரும்பான்மையான காட்சிகளில் வரும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார் அவர். அப்படி அவர் நடித்த பரோட்டா காமெடி தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெங்கும் ரசிக்க வைத்தது. இதனால் பரோட்ட சூரி என்றே அவர் அழைக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு பல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

முன்னணி காமெடி நடிகராக மாறிய சூரி
தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட அவர் முன்னணி நடிகர்களுடனும் நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டோருடன் நடித்த காமெடி காட்சிகள் ஹிட்டாக தமிழின் முதன்மை நகைச்சுவை நடிகராக மாறினார். குறிப்பாக சிவகார்த்திகேயனுடனான அவரது கெமிஸ்ட்ரி காமெடியில் பயங்கரமாக ஒர்க் அவுட் ஆனது. அதேசமயம் அவரது காமெடிகள் அனைத்தும் ஒரே மாதிரி இருப்பதாக விமர்சனங்களும் எழுந்தன.

ஹீரோவான சூரி
தொடர்ந்து காமெடியில் அனைவரையும் சிரிக்க வைத்த அவர் ஹீரோவாக தற்போது மாறியிருக்கிறார். இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். கடந்த 31ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி படம் அமோக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மேலும் சூரியின் நடிப்பையும் ரசிகர்களும் வெகுவாக பாராட்டிவருகின்றனர். அதுமட்டுமின்றி இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக அமையும் என்கிறார்கள்.

சூரிக்கு நன்றியே இல்லை
இந்நிலையில் காமெடி நடிகர் போண்டாமணி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சூரி குறித்து கடுமையாக பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "நடிகர் சூரி எனது வீட்டில் தங்கி சாப்பிட்டவர். அவர் ஒரு ஃபோன் பண்ணிக்கூட எனது உடல்நிலை குறித்து விசாரிக்கவில்லை. என்னுடன் நடிக்காத விஜய் சேதுபதி எனக்கு உதவி செய்யும்போது சூரி விசாரிப்பதில் என்ன வந்துவிட்டது. காதல் படத்தில் நடித்த சுகுமார் சூரியை தினமும் அழைத்துவருவார். அப்போது அவருக்கு தினமும் 200 ரூபாய் கொடுப்பேன். அவர் வென்றுவிட்ட பிறகு என்னை கண்டுகொள்ள்வில்லை. அவர் நன்றி இல்லாதவர்" என்றார்.

போண்டா மணிக்கு சரியில்லாத உடல்நலம்
வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன் பல காமெடி காட்சிகளில் நடித்தவர் போண்டா மணி. அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் போனது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. இதனையடுத்து அவருக்கு ரஜினி, பார்த்திபன், விஜய் சேதுபதில் உள்ளிட்டோர் உதவியிருந்தனர். அதேசமயம் வடிவேலு உதவி செய்யவில்லை என மணி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











