காமெடி நடிகர் பிரம்மானந்தத்துக்கு ஹேப்பி பர்த் டே.. டகால்டியில் யோகி பாபுவுடன் இவர் செம்ம ரகளை!

By Staff

Recommended Video

DAGAALTY MOVIE | POSTER PAKIRI REVIEW | FILMIBEAT TAMIL

சென்னை: டோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகரும், சந்தானத்தின் டகால்டி பட நடிகருமான பிரம்மானந்தத்துக்கு இன்று பிறந்தநாள்.

திரையுலகில் பல துறைகள் உண்டு நடிப்பது மட்டும் அல்ல இயக்குவது இசை அமைப்பது, ஒளிப்பதிவு,படத்தொகுப்பு, கலை, நடனம் போன்ற பல துறை சேர்ந்த ஒன்று தான் சினிமா.

Comedy actor Brahmanandam celebrating his 64th birthday today

இதில் காமெடிக்கு என்று ஒரு தனி இடம் எல்லா வகை சினிமாவிற்கும் உண்டு. அதில் தனது காமெடியால் அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர் தான் பிரம்மானந்தம். தெலுங்கு திரைப்பட உலகில் அறிமுகமாகி அங்கு கொடிகட்டி பறந்து கொண்டு இருக்கிறார்.

ஒரு கலைஞன் தன் நடிப்பால் அனைவரையும் கவர்ந்துவிட முடியும். ஆனால் தனது நடிப்பால் அனைவருக்கும் பல விஷயங்களை எடுத்து கூறவும் முடியும் என எடுத்துக் காட்டியவர் பிரம்மானந்தம்.

'ஆஹா நா பெலன்டா' என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார் பிரம்மானந்தம். தொடர்ந்து சுமார் நூறு படங்களுக்கு மேல் தெலுங்கிலேயே நடித்து வந்தார். இவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட் ஆகின. தெலுங்கில் ஒரு முன்னணி நடிகராக உருவெடுத்தார். இவர் நடித்த பாபய் ஹோட்டல் திரைப்படம் இவருக்கு பிலிம்பேர் விருதை பெற்று தந்தது அதில் தனது வித்தியாசமான காமெடியில் கலக்கி இருப்பார் பிரம்மானந்தம்.

இவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக துவங்கின. பின் தெலுங்கு திரையுலகில் இருந்து பாலிவுட் படங்களில் நடிக்க சென்றார். பின் தமிழ் திரைபடங்களிலும் நடித்தார் பிரம்மானந்தம்.

இந்திய சினிமாவில் எவரும் செய்ய முடியாத சாதனையை இவர் படைத்தார். அதிக திரைபடங்களில் நடித்த ஒரே நடிகர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது வரை சுமார் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இந்திய அரசால் வழங்கப்படும் கவுரவ விருதான பத்ம ஸ்ரீ விருதை பிரம்மானந்தம் பெற்று உள்ளார். மற்றும் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நபர்களில் இவரும் ஒருவர். இவர் ஆந்திரா அரசு வழங்கும் நந்தி விருதையும் அதிகம் பெற்றுள்ளார். இன்று தனது 64வது பிறந்த நாளை இவர் கொண்டாடி வருகிறார். இதனை ஒட்டி பல பிரபலங்களும் மற்றும் இவரது ரசிகர்களும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

சந்தானத்தின் டகால்டி படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து கடைசி 20 நிமிடம் வரும் கிளைமேக்ஸ் காட்சியில் பிரம்மானந்தம் செய்யும் ரகளையை மக்கள் தியேட்டரில் பார்த்து வயிறு குலுங்க சிரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X