பகாசூரன் படம் பார்க்க வந்த பெண்.. கையை பிடித்து முத்தம் கேட்ட கூல் சுரேஷ்.. ஓவராத்தான் போறாரு!
சென்னை : இயக்குனர் மோகன் ஜி இயக்கிய பகாசூரன் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இப்படத்தில், செல்வராகவன், நட்டி என்கிற நடராஜ், ராதாரவி, ராஜன், மன்சூர் அலி கான், தர்க்ஷ என பலர் நடித்துள்ளனர்.
பகாசூரன் படம் பார்க்க வந்த பெண்ணின் கையை பிடித்து முத்தம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார் கூல்சுரேஷ்.

நடிகர் கூல் சுரேஷ்
காமெடி நடிகரான கூல் சுரேஷ் சாக்லேட், சீறி, காக்க காக்க, இனிமேல் இப்படித்தான், நண்பேன்டா போன்ற படத்தில் நடித்துள்ளார். வில்லனாக அறிமுகமான கூல் சுரேஷ் படவாய்ப்பு இல்லாதால் பின் நாளில் நகைச்சுவை நடிகராக மாறினார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானத்துடன் சேர்த்து கொண்டு இவர் கொடுத்த அலப்பறைக்கு அளவே இல்லை என்று சொல்லலாம்.

கூவி கூவி மோஷன்
சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ், வெந்துதணிந்தது காடு படத்திற்கு கூவி கூவி மோஷன் செய்தார். வெந்துதணிந்தது காடு..படத்திற்கு வணக்கத்தை போடு என அவர் செய்த புரோமோஷன் மிகப்பெரிய அளவில் பிரபலமானதால், பட்டி தொட்டி எங்கும் கூல் சுரேஷ் பிரபலமானார். படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்ததை அடுத்து, படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கூல் சுரேஷிற்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஐபோன் பரிசாக அளித்தார்.

பகாசூரன்
இதனால்,கூல் சுரேஷ் எந்த படம் வந்தாலும், தியேட்டருக்கு முதல் ஆளாக வந்து விமர்சனம் செய்துவிடுகிறார். பகாசூரன் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ள கூல் சுரேஷ் படம் பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பகாசூரன் படம் இன்றைய இளம் பெண்களும், மாணவர்களும் பார்க்க வேண்டிய படம்.

அனைவரும் பார்க்க வேண்டிய படம்
இன்றைய சமூதாயம் செல்போனிலால் எவ்வளவு சீரழிந்து உள்ளது என்பதை இந்த படம் எடுத்துக்காட்டுகிறது. இதனால், அந்த படத்தை அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும். மேலும், இது என்னுடைய நூறாவது திரைப்படம். என்னுடைய நூறாவது திரைப்படமாக இந்த படம் அமைந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று பேசினார்.

முத்தம் கேட்டு தொல்லை
அப்போது படம் பார்த்துவிட்டு வந்த பெண்ணின் தோள் மீது கை போட்டும், கை பிடித்துக்கொண்டும் முத்தம் கொடுக்குமாறு கேட்டு தொல்லை செய்தார் கூல் சுரேஷ். ஆனால், அந்த பெண் சார் விட்டுடுங்க என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடினார். உடனே அந்தர் பல்டி அடித்த கூல் சுரேஷ் அந்த பெண் என்னுடைய தங்கை மாதிரி என் பிளேட்டை மாற்றி போட்டார்.

ஓவராத்தான் போறாரு
கடந்த சில நாட்களுக்கு முன் நான் கடவுள் இல்லை படம் பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த சுரேஷ், அருகில் இருந்த நடிகை சாக்ஷி அகர்வால் எதிர்பாராத நேரத்தில் அவருக்கு முத்தம் கொடுத்தார்.கடந்த சில நாட்களாக இவரின் செயல் ஓவராத்தான் போகிறது என பலர் கூல் சுரேஷ் மீது அதிருப்தியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











