GOAT: கோட் படம் பார்க்க ஆடுடன் வந்த கூல் சுரேஷ்.. விஜய் சாருக்கு மட்டும் இப்படி நடக்குது என ஆதங்கம்!
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் இன்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள படம் தி கோட். இந்தப் படம் விஜய்யின் 68வது படமாகும். விஜய் சினிமாவில் இருந்து விலகவுள்ளதால், இந்தப் படத்தின் மீது, பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படத்தினை விஜய்யின் அனைத்து தரப்பு ஆடியன்ஸும் கொண்டாடவேண்டும் என்ற நோக்கத்தில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சிறப்பாக செயல்பட்டு தமிழ்நாடு மட்டும் இல்லாமல், அண்டை மாநிலங்களிலும் படத்தினை ரிலீஸ் செய்ய பெரும் சிரத்தை எடுத்துள்ளார்.
படம் தமிழ் நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 1100 திரையரங்குகளுக்கு மேல் ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் மல்டிஃபிளக்ஸ் திரைகளைக் கொண்ட திரையரங்குகளை மனதில் கொண்டால், படத்தின் வசூல் முதல் நாளில் இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் வசூலிக்காத தொகையை வசூல் செய்யவுள்ளது என்பது மட்டும் தெளிவாகியுள்ளது.

இப்படியான நிலையில், படத்திற்கு தமிழ்நாட்டில் காலை 9 மணிக் காட்சிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. ஆனால் பல திரையரங்குகள் காலை 9.30 மணி காட்சிகளுக்கு டிக்கெட்டுகளை விற்றுவிட்டதால், தமிழ்நாடு அரசின் இந்த அனுமதியால் எந்த பயனும் இல்லை என திரையரங்க உரிமையாளர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் காலை 6 மணிக்கோ அல்லது அதிகாலை 4 மணிக் காட்சிக்கோ தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்திருந்தால் படக்காட்சிகள் இன்னும் அதிகமாகியிருக்கும் என பலர் கூறுகின்றனர்.

கூல் சுரேஷ்: இந்நிலையில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் கூல் சுரேஷ். இவர் சினிமாக்களில் நடிப்பது மட்டும் இல்லாமல், ஒரு படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு வருகை புரியும்போது, பல்வேறுவிதமான முறையில் படம் பார்க்க வருவார். பல படங்களுக்கு படத்தின் கதநாயகனின் கதாபாத்திரத்தைப் போலவே மேக்கப் போட்டுக் கொண்டு வருவார். இது பலரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் உள்ளது.

ஆடுடன் வந்த கூல்: தொடர்ந்து கவனிக்கப்படும் இவருக்கு யூடியூப் சூப்பர் ஸ்டார் என செல்லப் பெயரும் இணையவாசிகள் மத்தியில் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள கோட் படம் பார்க்க வந்த நடிகர் கூல் சுரேஷ், ஒரு ஆட்டையும் தன்னுடன் பிடித்து வந்தார். மேலும் அந்த ஆட்டினை பந்தையத்திற்கு விடுவதைப் போலவும் சைகை காட்டினார். அதன் பின்னர் ஆட்டைத் தனது தோளில் சுமந்து கொண்டு, 'ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா விஜய் சார் படத்தைப் பார்த்து ஆடுங்கடா' என பாடினார். கோட் என்றால் ஆடு என்று பொருள் அதனால்தான் ஆடுடன் வந்துள்ளேன் எனக் கூறினார்.

அதிகாலை காட்சி? :தொடர்ந்து அவர் பேசும்போது, நமக்கு அருகில் இருக்கும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கோட் படத்திற்கு அதிகாலை 4 மணிக் காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால் விஜய் சாரின் கோட் படத்திற்கு மட்டும் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை எனக் காட்டமாக கூறினார். கூல் சுரேஷின் இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஏன் தொடர்ந்து நடிகர் விஜய் படங்களுக்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றது.



Click it and Unblock the Notifications











