அப்பாவை காணவில்லை..எங்கையாவது பார்த்தால் சொல்லுங்க.. கண்கலங்கிய கூல் சுரேஷ்!
சென்னை : நகைச்சுவை நடிகரான கூல் சுரேஷ் தனது அப்பாவை காணவில்லை என தெரிவித்துள்ளார்.
நடிகர் கூல் சுரேஷ் சாக்லேட், சீறி, காக்க காக்க, இனிமேல் இப்படித்தான், நண்பேன்டா போன்ற படத்தில் நடித்துள்ளார். வில்லனாக அறிமுகமான கூல் சுரேஷ் படவாய்ப்பு இல்லாதால் நகைச்சுவை நடிகராக மாறினார்.

கூல் சுரேஷ்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானத்துடன் சேர்த்து இவர் அடிக்கும் ரகளைக்கு ஆளவே இருக்காது.
சிம்புவின் தீவிர ரசிகரான இவர் வெந்து தணிந்தது காடு படத்தின் பெயர் அறிவிப்பு வந்தவுடன் வெந்துதணிந்தது காடு..படத்திற்கு வணக்காத்தை போ எனஅவர் செய்த புரோமோஷன் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனது. சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்துள்ளது.

ஐபோன் பரிசு
இதையடுத்து, இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கூல் சுரேஷிற்கு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஐபோன் ஒன்றை பரிசாக அளித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் சிம்புவின் அடுத்த படத்தில் கூல் சுரேஷ் நடிப்பார் என்று சிம்புவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.இதனால், கூல் சுரேஷ் பட விமர்சனம், போட்டோஷுட் என படு பிஸியாக இருக்கிறார்.

அப்பாவை காணவில்லை
இந்நிலையில் தனது தந்தை காலையில் வாக்கிங் சென்றதாகவும் அவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்று கூல் சுரேஷ் தனது சமூக வலைத்தில் அவர் வீட்டிலிருந்து வெளியேறி வீடியோவை பகிர்ந்து 29.9.2002 அன்று காலை 10 மணிக்கு வாக்கிங் போனார். காலையில் மழை பெய்ததால் தாமதமாக சென்றார். 24 மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது போதும் இன்னும் வீடு திரும்பவில்லை.

தயவு செய்து தெரியப்படுத்துங்கள்
அவருக்குக 84 வயது என்பதால் சரியாக காது கேட்காது, என் அப்பா பெயர் முத்தையா, மஞ்சள் சட்டை, கட்டம் போட்ட நீல நிற லுங்கி, கையில் குடை வைத்திருந்தார். இவரை எங்கேயும் கண்டால் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுங்கள் 8610966900 என்று எண்ணுக்கு தயவு செய்து தெரியப்படுத்துங்கள் என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











