Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ஐபோன் கொடுத்த தயாரிப்பாளருக்கு..கூல் சுரேஷ் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?
சென்னை : வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கூல் சுரேஷூக்கு தயாரிப்பாளர் ஐபோனை பரிசளித்த நிலையில், கூல் சுரேஷ் ஐசரி கணேஷனுக்கு வித்தியாசமான பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.
இப்படத்தில் சித்தி இத்னானி, ராதிகா, சித்திக், நீரஜ் மாதவ், ஏஞ்சலினா ஆப்ரஹம் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர்.
முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிம்புவுக்கு ஜோடியாக குஜராத்தி நடிகை சித்தி இத்னானியும், அம்மாவாக ராதிகாவும் நடித்துள்ளனர்.
விஜய்
சேதுபதிக்கு
முன்னாடி
இந்த
கதை
இத்தனை
பேர
தாண்டி
வந்துச்சா?
தயாரிப்பாளர்
சொன்ன
மாஸ்
தகவல்!

வெந்து தணிந்தது காடு
விண்ணைத்தாண்டி வருவாயா என்ற ரொமான்டிக் படத்தை கொடுத்த கௌதம் மேனனுடன் மீண்டும் இணைந்து சிம்பு வெந்து தணிந்தது காடு என்ற கேங்ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். ஜெயமோகனின் ஐந்து நெருப்புகள் என்ற கதையை அடிப்படையாக வைத்து உருவான படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

வாரிக்குவிக்கும் வசூல்
வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படமானது கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டை பெற்று வருகிறது. ஏ.ஆர் ரஹ்மானின் இசை அனைவரையும் ஆட்டம் போடவைத்துவிட்டது எனலாம், குறிப்பாக மல்லிப்பூ பாடல் பலரின் பேவரைட் பாடலாக மாறி ரசிகர்கள் அந்த பாடலை திரும்ப திரும்ப கேட்டு வருகின்றனர்.

சிம்புவுக்கு கார் பரிசு
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியால் மகிழ்ச்சி அடைந்த தயாரிப்பாளர் ஐசரி கௌதம் வாசுதேவ மேனனுக்கு ராயல் என்ஃபீல்ட் பைக்கை பரிசாக அளித்தார். அதே போல, நடிகர் சிம்புவுக்கு டொயாடோ வெல்ஃபையர் என்ற உயர்தர சொகுசு கார் ஒன்றை பரிசாக அளித்தார். அந்த காரின் விலை ரூ 93லட்சம் என கூறப்படுகிறது.

ஐபோன் பரிசு
இந்த படத்திற்கு வெந்து தணிந்தது காடு என பெயர் வைத்ததுமே படத்தை ப்ரோமோஷன் செய்யும் வகையில், . "வெந்து தணிந்தது காடு... எஸ்டிஆருக்கு வணக்கத்த போடு"என்றும் எந்த படத்திற்கு சென்றாலும் "வெந்து தணிந்தது காடு" படத்தை படத்தை மறக்காமல் ப்ரோமோஷன் செய்த கூல் சுரேஷூக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஐபோன் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

வித்தியாசமான பரிசு
ஐபோன் கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கூல் சுரேஷ் ஐசரி கணேஷுக்கு குச்சி மிட்டாயில் வெந்து தணிந்தது காடு ஐசரி கணேஷுக்கு வணக்கத்தை போடு என்ற வாசகத்துடன் வித்தியாசமான பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். இந்த அன்பு பரிசை ஐசரி கணேஷ் மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டார்.