எப்படி ரெண்டு மூணு உஷார் பண்றீங்க.. பாதம், பிஸ்தா சாப்டும் தெம்பில்ல.. ரங்கராஜை கலாய்த்த கூல் கூரேஷ்

சென்னை: தமிழ் சினிமாவின் காமெடி நடிகரும், பிக் பாஸ் தமிழ் சீசன் 7-ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் கூல் சுரேஷ். சிம்புவின் தீவிர ரசிகரான இவர் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் பிரமோஷனை விதவிதமாக சொல்லி ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதைத் தொடர்ந்து, பல ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தனக்குரிய பாணியில் கூல் சுரேஷ் பேசி வருகிறார். தற்போது இவர்கள் மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரம் குறித்து பேசி இருக்கிறார். அது தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

புதிதாக வெளியாகும் சினிமாவை பார்த்து விமர்சனம் கூறி வரும் கூல் சுரேஷ், இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர் மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கூல் சுரேஷ், அவர்கள் அனைவரும் வசதியானவர்களாக இருக்கிறார்கள் ஒரு பொண்டாட்டி இல்ல ஓராயிரம் பொண்டாட்டி வைத்துக்கொள்வார்கள். என்னால், ஒரு பொண்டாட்டியை வைத்துக் கொண்டு சமாளிக்க முடியவில்லை.

Madhampatty Rangaraj Cool suresh
Photo Credit:

கூல் சுரேஷ் பேச்சு: இதனால், தயவுசெய்து மாதம்பட்டி அவர்களின் தொலைபேசி எண்ணை எனக்கு வாங்கிக் கொடுங்கள். அவரிடம் எப்படி இரண்டு பொண்டாட்டியை வைத்து சமாளிக்கிறீர்கள், அதற்காக மாத்திரை மருந்தை ஏதாவது போடுகிறீர்களா? தயவு செய்து சொல்லுங்கள் என்று கேட்டு தெரிந்து கொள்கிறேன். எனக்கு உடம்பில் சக்தியே இல்லை, அவர்கள் எப்படி தெம்பாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நானும் பாதாம், பிஸ்தா என அனைத்தையும் சாப்பிட்டு பார்த்தேன். அனைத்தும் செகண்ட் குவாலிட்டி போல ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. இதனால், இந்த ஊடகம் மூலமாக அவரின் நம்பர் யாருக்காவது கிடைத்தால் என்னிடம் சொல்லுங்கள், அவரிடம் சில டிப்ஸ்களை நானும் கேட்டு தெரிந்து கொள்கிறேன்.

பேசி முடிவு எடுங்கள்: யாருக்காவது பிரச்சனை என்றால் காவல்துறையிடம் சென்று புகார் அளிக்க வேண்டும். ஆனால், யாருமே காவல்துறைக்கு செல்வதில்லை யூடியூபிற்கு சென்று நேரடியாக பேட்டி கொடுக்கிறார்கள். இதன் மூலம், பப்ளிசிட்டி மட்டும் தான் கிடைக்கும், தீர்வு கிடைக்காது. இந்த விஷயத்தில் இருவரும் பேசி சுமூகமாக ஒரு முடிவுக்கு வாருங்கள், சோஷியல் மீடியாவில் பேசுவதால், வீடியோத்தான் டிரெண்டாகுமே தவிர வாழ்க்கை ஓடாது என்று கூல் சுரேஷ் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X