பிக் பாஸ் சீசன்7.. 75 நாட்கள் வீட்டில் இருந்த கூல் சுரேஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கூல் சுரேஷ் எவிக்ட் செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த வீட்டில் இருந்த போது வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசன் 7, கடந்த அக்டோபர் மாதம் 2ந் தி தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

இதில், கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, மாயா, பூர்ணிமா, பவா செல்லத்துரை, யுகேந்திரன், விஜய் வர்மா, சின்னத்திரை நடிகை ரவீனா, நடிகை விசித்ரா, நிக்சன் உள்ளிட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

comedy actor cool suresh salary in bigg boss season 7 tamil

விறுவிறுப்பான பிக்பாஸ்: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிக் ஹவுஸ், சுமால் ஹவுஸ் என்று இரண்டு வீடாக சிறிய மாற்றத்துடன் தொடங்கியது. ஆரம்பத்தில் நிகழ்ச்சி கொஞ்சம் மந்தமாகப் போவதாக நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக வைல்டு கார்டு என்ட்ரி மூலம் தினேஷ், அர்ச்சனா, பிராவோ, அன்ன பாரதி, கானா பாலா என மேலும் ஐந்து போட்டியாளர்களை உள்ளே வந்தனர்.

இந்த வார எவிக்ஷன்: இந்த வைல்டு கார்டு போட்டியாளர்களில் தற்போது தினேஷ், அர்ச்சனா இருவர் மட்டுமே நிகழ்ச்சியில் தொடர, மீதி மூன்று பேரும் ஏற்கெனவே எவிக்ட் ஆகிவிட்டனர். கடந்த வாரம் மிக்ஜாம் புயல் காரணமாக எவிக்‌ஷன் நடைபெறாததால் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனன்யா ஏற்கெனவே மிட் வீக் எவிக்‌ஷன் மூலம் வெளியேற்றப்பட்டார்.

கூல் சுரேஷ் வாங்கிய சம்பளம்: கூல் சுரேஷ் சில தினங்களுக்கு முன், வீட்டு ஞாபகம் வந்து விட்டதாகக கூறி பிக் பாஸ் வீட்டிலிருந்து தன்னை வெளியில் அனுப்பிவிடுமாறு கோரிக்கை வைத்ததுடன் அந்த வீட்டிலிருந்து சுவர் ஏறித் தப்பிக்க முயற்சி செய்தார். இதையடுத்து, நேற்று அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பிக் பாஸ் வீட்டில் 76 நாட்கள் இருந்த, கூல் சுரேஷூக்கு வாரத்திற்கு 1.5 லட்சம் வீதம் சம்பளம் என்ற அடிப்படையில், சுமார் 15 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கூல் சுரேஷ்: நகைச்சுவை நடிகரான கூல் சுரேஷ் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் காமெடி நடிகராகவும், வில்லன் நடிகராகவும் நடித்துள்ளார். சிம்புவின் தீவிர ரசிகரான இவர், வெந்து தணிந்தது காடு படத்திற்கு விதவிதமாக ப்ரோமோஷன் செய்தார். மேலும், இவர் கடந்த சில வருடங்களாக திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை, முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிட்டு, திரையரங்க வாசலிலேயே இவர் கூறும் வித்தியாசமான ரிவ்யூ மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X