மர்மர் படத்தை வாவ்னு சொல்றதெல்லாம் இன்ஃப்ளூயன்ஸர் தான்.. பிக் பாஸ் டேனியல் ஓபன் அட்டாக்!

சென்னை: இந்தியாவின் முதல் ஃபவுண்டட் ஹாரர் ஃபூட்டேஜ் படம் என விளம்பரப்படுத்தி மர்மர் படத்தை ரிலீஸ் செய்துள்ள இயக்குநர் ஹேமந்த் நாராயணன் இன்ஃப்ளூயன்ஸர்களை வைத்து தான் படத்திற்கான புரமோஷனை செய்துள்ளார் என வெளிப்படையாகவே பேசியிருக்கிறார் பிக் பாஸ் டேனியல். ராபர் எனும் படத்தில் அவர் நடித்துள்ள நிலையில், அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வெளியான மர்மர் படத்தை பற்றி பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் தான் டேனியல். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் காமெடியனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Comedy Actor Daniel Annie Pope slams Murmur movie and Influencers fake review

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார். பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், இன்ஃப்ளூயன்ஸர்களின் ஆதிக்கத்தால் தன்னை போன்ற நடிகர்களுக்கு சினிமா வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாக புலம்பித் தள்ளியிருக்கிறார்.

காமெடி நடிகர் டேனியல்: பொல்லாதவன், பையா, ரெளத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, யாமிருக்க பயமே, மாசு என்கிற மாசிலாமணி, கவலை வேண்டாம், சங்கிலி புங்கிலி கதவ தொற, மரகத நாணயம், ரங்கூன், ஆயிரத்தில் இருவர், சக்கபோடு போடு ராஜா, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், காத்தாடி, ஜருகண்டி, திட்டம் போட்டு திருடர் கூட்டம், தனுசு ராசி நேயர்களே, இரண்டாம் குத்து, வணக்கம் டா மாப்பிள்ளை, லாபம், ஜாங்கோ, மாநாடு, சிங்கபூர் சலூன் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். ஆனால், பெரிதாக இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்கிற வருத்தம் அதிகமாகவே உள்ளது. ராபர் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

இன்ப்ளூயென்சர்களால் தொல்லை: சினிமாவில் ஏகப்பட்ட நடிகர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் சமீப காலமாக படங்களில் திடீரென இன்ப்ளூயென்சர்களின் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது என்றும் பரிதாபங்கள் கோபி, சுதாகர் போல அவங்களே சொந்த காசுல படம் எடுத்து நடிக்கலாமே? ஏன் மற்ற நடிகர்களின் வாய்ப்புகளை தட்டிப் பறிக்கின்றனர் என்கிற கேள்வியை எழுப்பி உள்ளார்.

மர்மர் படத்துக்கு எதிராக: இந்தியாவின் முதல் ஃபவுண்டட் ஃபூட்டேஜ் என ஒரு படம் சமீபத்தில் வெளியானது. அந்த படத்துக்கு வாவ் என சோசியல் மீடியாவில் சொல்லும் அனைவருமே இன்ப்ளூயென்சர்கள் தான். அவர்களின் வீடியோக்கு கீழ் படத்தை பலரும் கழுவித்தான் ஊற்றுகின்றனர். இப்படி ஏமாற்றி விற்பனை செய்யும் நிலைமைக்கு சினிமா வந்து விட்டது என்று விளாசியுள்ளார். நீங்க அந்த படத்தை பார்த்தீர்களா என்கிற கேள்விக்கு, இன்னும் இல்லை. ஆனால் பார்க்க வேண்டும் என்கிற ஆவலை தூண்டி உள்ளனர் என்று கூறியுள்ளார்.

என்ன பிரச்சனை: ராபர் படத்தின் புரமோஷனுக்கு வந்த இடத்தில் டேனியல் தனது சொந்த கதையையும் சோக கதையையும் சொல்லி புலம்புவது ஏன் என்றும் பல வருடங்களாக நடித்து திறமையை காட்ட முடியாத ஆதங்கத்தில் பேசியுள்ளார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். டேனியல் சொல்வது சரி தான் அந்த படத்தை பார்த்து தலைவலி வந்தது தான் மிச்சம். இன்ஃப்ளூயன்சர்கள் காசுக்காக தவறாக புரமோஷன் செய்கின்றனர் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டுள்ளனர்.

FAQs
மர்மர் திரைப்படம் என்ன வகையான படம்?

ஃபவுண்டட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம்

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X