Goundamani: கவுண்டமணி மகள் திருமணம்.. இணையத்தில் தீயாய் பரவும் போட்டோ!

சென்னை: தமிழ் சினிமாவில் எத்தனையோ நகைச்சுவைக் கலைஞர்கள் தோன்றியிருந்தாலும், கவுண்டமணிக்கு நிகரான புகழ் வேறு யாருக்கும் கிடையாது. காமெடியில் கவுண்டமணி அறிமுகப்படுத்திய நக்கல் நய்யாண்டி பாணியை தான் இன்று வரை பலரும் பின்பற்றி வருகின்றனர். இவர் புகழின் உச்சியில் இருந்தாலும், இவர் குடும்படத்தை மீடியாவிற்கு காட்டாமலே வைத்து இருக்கிறார். தற்போது கவுண்டமணியின் மகள் திருமண போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் கவுண்டமணி: கோவை அருகே உள்ள வளகுண்டபுரம் என்ற கிராமத்தில் பிறந்தவர் கவுண்டர். உண்மையான பெயர் சுப்பிரமணி. ஆனால் நடிப்பில் எதிராளிக்கு கவுன்ட்டர் கொடுப்பது போல இவர் பேசியதால் 'கவுன்ட்டர் மணி' என அழைக்கப்பட்டார். பின்னர் அதுவே கவுண்டமணி ஆகிவிட்டது. கோவையைச் சேர்ந்தவர் என்பதால் அப்பகுதியில் பெரும்பான்மை சமூகத்தவர் போலிருக்கிறது என நினைத்து பலரும் கவுண்டர் என அழைக்க ஆரம்பித்தனர்.

Comedy actor goundamani daughter marriage trending on social media

முக்கிய கதாபாத்திரம்: கவுண்டர் முதலில் நடித்தது 16 வயதினிலே படம் தான். ரஜினிக்கு எடுபிடியாக, டீக்கடைகாரராகத் தோன்றியிருப்பார் கவுண்டர். அதில் இவர் பேசிய பத்தவச்சிட்டியே பரட்டை என்ற வசனம், ரஜினியின் இது எப்படி இருக்கு? என்ற பஞ்ச் வசனத்துக்கு இணையாக பேசப்பட்டது. பாரதிராஜா மற்றும் பாக்யராஜ் இணைந்து நடித்த புதிய வார்ப்புகள் படத்தில் வில்லனாக மிரட்டியிருப்பார் கவுண்டமணி. தொடர்ந்து பாக்யராஜ் இயக்கிய முதல் படமான சுவரில்லா சித்திரம் படத்திலும், கவுண்டமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

செந்தில் கவுண்டமணி ஜோடி: தமிழகத்தின் லாரல் மற்றும் ஹார்டி என்று புகழப்பட்ட ஜோடி கவுண்டமணி, செந்தில் ஜோடி. எண்பதுகளில் கவுண்டமணி இல்லாத படங்களே இல்லை எனும் அளவுக்கு ஏராளமான படங்களில் நடித்தனர். தொன்னூறுகளிலும் ஏராளமான படங்களில் நடித்தார் கவுண்டமணி. ஆனால் 2000 ஆண்டுக்குப் பிறகு நடிப்பதைக் குறைத்துக் கொண்டார்.

கவுண்டமணியின் மகள் திருமணம்: சினிமா வாழ்க்கை வேறு, குடும்ப வாழ்க்கை வேறு என எண்ணம் கொண்ட கவுண்டமணி தனது குடும்பத்தை மீடியாவில் காட்டாமல் வைத்து இருந்தார். தற்போது கவுண்டமணியின் மூத்த மகள் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். அந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒத்த ஓட்டு முத்தையா: தற்போது, கவுண்டமணி ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இதில், யோகி பாபு மட்டுமின்றி சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, வையாபுரி, முத்துக் காளை, பயில்வான் ரங்கநாதன், மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X