Goundamani: கவுண்டமணி நிலத்தை ஆட்டையப்போட நினைத்த நிறுவனம்.. 20 வருசம் போராடி சொத்தை மீட்ட கவுண்டமணி

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னனி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் கவுண்டமணி. இவரும் செந்திலும் இணைந்துவிட்டாலே அந்தப் படத்தில் காமெடி டிராக் செம ஹிட்தான். கவுண்டமணி 90களில் அன்றைய கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கினார். இவர் கடந்த 1996-ம் ஆண்டு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள, ஆற்காடு சாலையில் நிலம் ஒன்றை வாங்கினார். 5 கிரவுண்ட் மற்றும் 454 சதுர அடி கொண்ட அந்த நிலத்தினை நளினி பாய் என்பவரிடம் இருந்து வாங்கியுள்ளார். இந்த நிலத்தில் வணிக வளாகம் கட்ட திட்டமிட்டு பணம் செலவழித்த கவுண்டமணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் கடந்த 20 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி அதில் வெற்றி கண்டுள்ளார்.

வாங்கிய இடத்தில் வணிக வளாகம் கட்ட திட்டமிட்டு அபிராமி பவுண்டேஷன் என்ற நிறுவனத்திடம் 15 மாதங்களில் வணிக வளாகத்தைக் கட்டி முடிக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையோடு ரூபாய் 3.58 கோடி கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நிறுவனம் கட்டுமானப் பணிகளை உரிய முறையில் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்திய வந்த நிலையில் கட்டுமான பணிகளை கவுண்டமணியிடம் போட்டிக்கொண்ட நிபந்தனையின்படி முடிக்க முடியவில்லை.

goundamani goundamani property

இது மட்டும் இல்லாமல் 2004ஆம் ஆண்டு அபிராமி பவுண்டேஷன் நிறுவனம் முழுமையான கட்டுமான பணிகளை நிறுத்திவிட்டு அந்த இடத்தை கையகப்படுத்தியதாக பேசப்படுகின்றது. இதனை அடுத்து நடிகர் கவுண்டமணி தனக்குச் சொந்தமான நிலத்தையும், அங்கு வணிக வளாகம் கட்ட தான் பணம் கொடுத்திருப்பதால் அதனை மீட்டுத் தரக்கோரி கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

உயர்நீதிமன்றம்: அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'கட்டுமான பணிகளை முழுமையாக முடித்துவிட்டு பணம் தராமல் இருந்தால் தான் அதனை கேட்க முடியும். முடிந்த கட்டுமான பணிகளுடன் ஒப்பிடுகையில் ரூபாய் 63 லட்சம் அதிகமாகவே கவுண்டமணியிடம் அந்த கட்டுமான நிறுவனம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தது. எனவே அந்த நடிகர் கவுண்டமணியிடமிருந்து பெற்ற 5 கிரவுன்ட் மற்றும் 454 சதுர அடி நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைப்பது மட்டும் இல்லாமல், கடந்த 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மாதம் ஒன்றுக்கு ரூபாய் ஒரு லட்சம் வீதம் கவுண்டமணிக்கு கட்டுமான நிறுவனம் வாடகையாக கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

goundamani goundamani property

உச்ச நீதிமன்ற உத்தரவு: கவுண்டமணிக்கு நிலத்தைத்தை திருப்பித் தரவேண்டும் என தனி நீதிபதி பெஞ்ச் தீர்ப்பளித்தை எதிர்த்து அபிராமி பவுண்டேஷன் நிறுவனம் 2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. கட்டுமான நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தனி நீதிபதி அளித்த தீர்ப்பினையே உறுதி செய்தது. அதாவது , நடிகர் கவுண்டமணியிடம் இருந்து பணம் பெற்ற பிறகும் அபிராமி பவுண்டேஷன் நிறுவனம் கட்டுமான பணியை முடிக்காததால், அந்த சொத்தை சட்டப்பூர்வமாக அபிராமி பவுண்டேஷன் நிறுவனம் வைத்திருக்க முடியாது என்றது. இந்த தீர்ப்பும் அபிராமி பவுண்டேஷனுக்கு எதிராகப் போனதால், அபிராமி பவுண்டேஷன் தரப்பில் இந்தத் தீர்ப்புகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

மீட்பு: ஆனால் உச்சநீதிமன்றம், அபிராமி பவுண்டேஷனின் மனுவை ஆய்வு செய்துவிட்டு தள்ளுபடி செய்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை உறுதி செய்தது. இந்த தீர்ப்பினை உச்சநீதிமன்றம் கடந்த மே மாதமே உறுதி செய்த நிலையில், காவல்துறையினர், நீதிமன்ற ஊழியர்கள் உதவியுடன் நடிகர் கவுண்டமணி தனது நிலத்தை கட்டிடத்துடன் மீட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி கவுண்டமணி வென்றுள்ளது பலரது மத்தியில் பரவலாக பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. மேலும் இன்றைக்கு அந்த நிலம் மற்றும் கட்டிடத்தின் மதிப்பு ரூபாய் 50 கோடிகள் வரை இருக்கும் என கூறப்படுகின்றது.

goundamani goundamani property

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X