'உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா' காமெடி நடிகர் திடீர் மரணம்.. அடுத்த சோகம்!

பிரபல காமெடி நடிகர் ஜெயசந்திரன் நேற்று சென்னையில் காலமானார்.

சென்னை: வடிவேலு உடன் பல காமெடி சீன்களில் நடித்த நடிகர் ஜெயசந்திரன் காலமானார்.

நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சிகளில், அவருடன் சேர்ந்து பலர் காமெடி செய்வர். அதில் ஒருவர் தான் ஜெயசந்திரன். ஹரி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்த ஆறு படத்தில் வடிவேலுவுடன் சேர்ந்து ஜெயசந்திரன் காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறார்.

Comedy actor Jayachandran passes away

'உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா', எனும் வடிவேலுவின் எவர்கிரீன் வசனம் இடம்பெற்ற காமெடி காட்சியை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த காமெடியில் இரண்டாவது நபராக வடிவேலுவிடம் வந்து பேசுபவர் தான் ஜெயசந்திரன்.

'என்னன்ணே கழுத்துல ரத்தம்' என வடிவேலு கேட்பதற்கு, 'அது ஒன்னுமில்லபா.. தண்டவாளத்துல தல வெச்சு படுத்திருந்தேன்.. நாலஞ்சு ரயிலு ஏறிட்டு போய்டுச்சு. ஆள் படுத்திருக்கிறது கூட தெரியாம வண்டி ஓட்டுறானுங்க', என புலம்விட்டு போவார். இது போல் இன்னும் சில காமெடிகளில் அவர் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் ஜெயசந்திரன் நேற்று தனது வீட்டு பாத்ரூமில் மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஜெயசந்திரனின் மரணம் கோலிவுட் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார். அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள நடிகர்களின் இழப்பு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X