For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியன் 2ல் கமலுடன் இணையும் விவேக் - நீண்ட நாள் ஆசை நிறைவேறியது

|

சென்னை: இந்தியன் 2ஆம் பாகத்தில் கமல்ஹாசனுடன் விவேக்கும் ஜோடி சேர்ந்து கலக்கப் போகிறார். இதன் மூலம் தன்னுடைய நெடு நாள் ஆசை நிறைவேறப்போகிறது என்று விவேக் கூறியுள்ளார். இந்தியன் முதல் பாகத்தில் கமலுடன் படம் முழுக்க கவுண்டமணி காமெடியில் கலக்குவார். இந்தியன் 2வில் விவேக் காமெடியில் கலக்கப் போகிறார். ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தில் ரஜினிடன் படம் முழுக்க விவேக் வருவார். அதே போல இந்தியன் 2ல் விவேக்கிற்கு முக்கிய கதாபாத்திரம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.

கமல் சிறு வயதிலேயே சினிமாவில் நுழைந்து விட்டாலும், இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தான் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப்படத்தில் தான் ரஜினிகாந்த்தும் அறிமுகமானார்.

Comedy Actor Joins with Kamal Hassan in Indian-2

அதே போல் ஜனங்களின் கலைஞன், சின்னக் கலைவாணர் என்று சொல்லப்படும் நடிகர் விவேக் ஆரம்பத்தில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துவந்தவர், 1987ஆம் ஆண்டில் இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த மனதில் உறுதி வேண்டும் படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

கமலுஹாசனும், விவேக்கும் இயக்குநர் சிகரத்தின் அறிமுகம் என்றாலும், இது வரையிலும் இருவரும் சேர்ந்து படத்தில் நடிக்கவில்லை. இது பற்றிய தனது ஏக்கத்தை எத்தனையோ போது மேடைகளில் வெளிப்படுத்தியிருந்தார். யானைக்கும் அடிசறுக்கும் என்று சொல்வார்கள். அதுபோலத்தான் நானும்.

அழகான மண்பாண்டங்களை செய்யும்போது, சில உடைந்து விடும், இன்னும் சில கோணல்மானலாக அமைந்து விடும். அதுபோல் தான் பாலச்சந்தர் சாரும். அருமையான அழகான கமல்ஹாசனை அறிமுகப்படுத்திய பாலச்சந்தர் சார் தான் என்னையும் அறிமுகப்படுத்தினார் என்று வேடிக்கையாக கூறியிருக்கிறார்.

நானும் கமல் சாருடன் இணைந்து நடிக்கவேண்டும் என்று ஆவலாக உள்ளேன். அது எப்போது நிறைவேறும் என்று தான் தெரியவில்லை என்றும் அடிக்கடி சொல்வார். அது இப்போது நிறைவேறியிருக்கிறது.

டைரக்டர் ஷங்கர் தயாரிப்பில் 1996ஆம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனா இந்தியன் திரைப்படத்தின் 2ஆம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. சுபாஷ்கரன் அல்லிராஜாவின் லைக்கா தயாரிப்பகம் தயாரிக்கும் இப்படத்தையும் ஷங்கர் இயக்குகிறார். கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் இணைகிறார்.

ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த ஆண்டு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் முதன்முதலாக கமலுடன் இணைகிறார் நடிகர் விவேக். நடிகர் விவேக் இந்தியன் 2ஆம் பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். விவேக்கின் நெடுநாள் ஆசை இந்த படம் மூலம் நிறைவேறப்போகிறது என்று பேரானந்தத்தில் உள்ளார் நடிகர் விவேக்.

விவேக் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்தாலும் உலக நாயகன் கமலுடன் இணைந்து நடிக்காதது ஒரு வருத்தமாகவே இருந்தது. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல் நடித்த தெனாலி படத்தில் விவேக் நடிக்க வாய்ப்பு வந்த போதிலும் சில காரணங்களால் அவரால் கமலுடன் இணைந்து நடிக்க முடியவில்லை.

அவரின் விருப்பம் டைரக்டர் ஷங்கர் மூலம் இந்தியன் 2ல் கைகூடியுள்ளது. இவர்கள் ஜோடி நிச்சயம் கலைகட்டும். வெகு நாட்களுக்கு பிறகு வெளியாகப்போகும் கமல்ஹாசனின் பட வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.

இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் விவேக்.

நிகழும் வரை சொப்பனம்; நிகழும் போதோ பக்குவம். 32 ஆண்டுகள் தந்த நிதானம். முழுமையான ஈடுபாட்டுடன் உழைப்பதே இக்கணப் பிரதானம். எப்போதும் போல் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். கமல் சார்க்கு என் அன்பு; ஷங்கர் அவர்களுக்கு என் நன்றி. லைக்காவுக்கு என் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

English summary
Vivek pair to join Kamal Haasan in Indian Part 2 and he has said that his long-term wish is fulfilled.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more