வடிவேலுவுடன் நகைச்சுவையில் கலக்கிய பிரபல நடிகர் காளிதாஸ் திடீர் மரணம்!
சென்னை : தமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் பலத்திரைப்படங்களில் இணைந்து நடித்த காமெடி நடிகர் காளிதாஸ் இன்று காலமானார்.
கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலமானார்.
இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

மர்மதேசத்தில்
சின்னத்திரையில் இந்திரா சௌந்தர்ராஜன் கதையில் கே.பாலசந்தர் தயாரிப்பில் உருவான திகில் தொடரான மர்மதேசம் தொடருக்கு இவர் குரல் கொடுத்திருந்தார். கணீர் குரலுக்கு சொந்தக்காரமான இவர் டப்பிங் கலைஞராவார். இவர், பல வில்லன் நடிகர்களுக்கும் குரல் கொடுத்துள்ளார்.

இன்ஸ்பெக்டராக
மருதமலை திரைப்படத்தில் வடிவேலுவுடன் காளிதாஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்தபடத்தில், தண்ணிய போட்டு தொட என்ற காமெடி காட்சியில் காளிதாஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருப்பார். இந்த திரைப்படம் மட்டும் இல்லாமல் பல திரைப்படங்களிலும் காளிதாஸ் வடிவேலுவுடன் இணைந்து பல நகைச்சுவைகாட்சியில் கலக்கி இருப்பார்.

உடல்நலக்குறைவால்
கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காளிதாஸ் உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை குணச்சித்திர நடிகர் மோகன் ராமன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் குரலை இனிமேல் கேட்க முடியாது. நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், வில்லன்களுக்கு தனது குரல் மூலம் சக்தி கொடுத்தவர் இறந்துவிட்டார் என பதிவிட்டுள்ளார்.

திரைத்துறை சோகம்
வெள்ளித்திரை, சின்னத்திரை என அனைத்திரும் தடம் பதித்த காளிதாஸ் உயிரிழந்துள்ளது. சினிமாத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மறைவுக்கு சினிமா உலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரின் இறுதிச்சடங்கு போருரில் நாளை நடைபெற உள்ளது.


Click it and Unblock the Notifications











