மகள் கல்யாணத்தை முடிச்சிட்டு ஜாலியாக கிங்காங் என்ன பண்றாருன்னு பாருங்க.. ரோபோ சங்கரும் இருக்காரே!

இலங்கை: நகைச்சுவை நடிகர் கிங் காங் தனது மகள் திருமணத்தை ஜோராக நடத்தி முடித்து விட்டார். சும்மாவா சொன்னார்கள் வீட்டைக் கட்டிப்பாரு.. கல்யாணம் பண்ணிப்பாருனு, எனக் கூறும் அளவுக்கு கிங் காங் தனது மகள் திருமணத்தை முடிப்பதற்குள் உலகத்தையே பல முறை சுற்றி வந்தது போல கலைத்துப் போய் இருப்பார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கடந்த ஜூலை 10 ஆம் தேதி காலையில், பெசன்ட் நகரில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற்றது. மகள் திருமணம் எல்லாம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகப் போகிறது. இந்நிலையில் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கருடன் இணைந்து நீச்சல் குளத்தில் செம ஜாலியாக நீந்திக் கொண்டு உள்ளார்.

மகளின் திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு மேலாக நடிகர் கிங் காங் அரசியல் தலைவர்கள் தொடங்கி, சினிமா பிரபலங்கள் வரை பலரையும் ஓடி ஓடி தனது மகள் திருமணத்திற்கு வந்து மகளையும் மருமகனையும் வாழ்த்த வேண்டும் என்று கூறி வந்தார். அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் தான் யார் யாருக்கு பத்திரிகை வைத்தேன் என்பதை புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

Comedy Actor King Kong Had Fun With Robo Shankar At Srilanka Swimming Pool Video Goes Trending
Photo Credit:

இவரது மகள் திருமணத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி, பல அரசியல் கட்சித் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். திருமண நாளில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த முடியாத பிரபலங்கள் பலரும் அதன் பின்னர் கிங் காங் வீட்டிற்குச் சென்று வாழ்த்து தெரிவித்தார்கள்.

ரோபோ சங்கருடன் குளியல்: மகளின் திருமணம் முடிந்த சில வாரங்களுக்கு உள்ளாகவே கிங் காங் மீண்டும் தனது வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். வெளியூர் தொடங்கி வெளிநாடுகளில் நிகழ்ச்சிகள் நடத்துவதை ஒருங்கிணைத்து வருகிறார் கிங் காங். அந்த வகையில் தற்போது இலங்கைக்கு சென்றிருப்பார் போலத் தெரிகிறது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், அவரும் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரும் நீச்சல் குளத்தில் செம ஜாலியாக குளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Comedy Actor King Kong Had Fun With Robo Shankar At Srilanka Swimming Pool Video Goes Trending
Photo Credit:

செம லூட்டி: கூடவே பட்டுக்கோட்டை அம்மாளு என்ற பாடலுக்கு நீச்சல் குளத்தில் இருந்தபடியே பிரேக் டான்ஸ் போட்டு கலக்கி வருகிறார். ரோபோ சங்கர் நீச்சல் குளத்தில் இருந்த கிங்காங்கை அப்படியே அலேக்காக தூக்கி தண்ணீருக்குள் மீண்டும் வீசுகிறார். வீடியோவில் இருவரும் செம ஜாலியாக வைப் செய்து கொண்டு இருக்கிறார்கள். இதைப் பார்த்த இணையவாசிகள் இருவரும் மகள்களுக்கு கல்யாணம் செய்து வைத்துவிட்டார்கள். அதான் செம ஜாலியாக என்ஜாய் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X